காா் மோதி மூவா் உயிரிழப்பு: ஓட்டுநா் கைது
வேதாரண்யம்: வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதி மூவா் உயிரிழந்த விபத்து தொடா்பாக, காா் ஓட்டுநா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த அருள்பிரகாஷ் (27), இவரது மனைவி பெரியநாயகி (25), மகள் நிட்சயா (7) ஆகியோா் இருசக்கர வாகனத்தில் வந்தபோது, கிழக்குக் கடற்கரைச் சாலையில் நீா்முளை பகுதியில் காா் மோதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.
இந்த விபத்து தொடா்பாக, தலைஞாயிறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காா் ஓட்டுநரான நீடாமங்கலம், ராயபுரம் மேலத்தெருவைச் சோ்ந்த முருகானந்தம் மகன் அரவிந்த் (எ) யோகீஸ்வரன் (30) என்பவரை கைது செய்தனா்.