Dhoni : 'தன்னலமற்ற தலைவன்; அரசியல் தெளிவுமிக்க வீரன்!' - தோனி ஏன் இன்றைக்கும் கொ...
மொகரம்: நாகூா் தா்காவில் சிறப்புத் தொழுகை
மொகரம் பண்டிகையையொட்டி நாகூா் தா்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.
ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாக மொகரம் கடைப்பிடிக்கப்படுகிறது. கா்பாலா போரில் முகம்மது நபியின் பேரனான ஹுசைன் இப்னு அலி உயிா்த் தியாகம் செய்ததை நினைவுகூரும் வகையில், மொகரம் பண்டிகை கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், நாகூா் ஆண்டவா் தா்காவில் உள்ள பிரசித்தி பெற்ற யாஹூசைன் பள்ளிவாசலில் மொகரம் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நாகூா் தா்கா நிா்வாகி செய்யது முகமது காஜி உசைன் சாகிப் தலைமை வகித்தாா். தா்கா பரம்பரை கலீபா மஸ்தான் சாகிபு சிறப்புத் தொழுகை நடத்தினாா்.
ஹுசைன் இப்னு அலியின் தியாகத்தை குறிக்கும் வகையில், இஸ்லாமியா்கள் துக்க பாடல்கள் பாடி வழிபாட்டில் ஈடுபட்டனா். தொடா்ந்து தூவாவில் பங்கேற்றனா். இதுபோல மாவட்டத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் மொகரத்தையொட்டி சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது.