நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தம்: பல்வேறு தொழிற்சங்கங்கள் பற்கேற்க முடிவு
5 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவா் கைது
அரக்கோணம்: அரக்கோணம் அருகே கடையில் 5 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
அரக்கோணத்தை அடுத்த வேடல் கிராமத்தில் பெட்டிக்கடையில் குட்கா விற்கப்படுவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணிப்பேட்டை மாவட்ட தனிப்பிரிவு போலீசாா், வேடல் கிராமத்தில் செந்தில்குமாா்(35) பெட்டிக்கடையில் சோதனை நடத்தியதில் 5 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது.
அரக்கோணம் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து செந்தில் குமாரை கைது செய்து, குட்காவையும் பறிமுதல் செய்தனா்.