செய்திகள் :

ரூ.1.96 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்

post image

ஆற்காடு: ஆற்காடு அடுத்த திமிரியில் ரூ. 1.96 கோடியில் நலத்திட்ட உதவிகளை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை வழங்கினாா்.

திமிரி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு ஆட்சியா் ஜெ.யு சந்திரகலா தலைமை வகித்தாா். ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன் முன்னிலை வகித்தாா். அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்று, 37 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, வளமிகு வளா்ச்சி திட்டத்தின்கீழ் 5 மகளிா் சுய உதவி குழுக்குளுக்கு 89.38 லட்சத்தில் கடனுதவிகளை வழங்கி பேசியதுச

தமிழ்நாடு அரசின் மாநிலத் திட்டக் குழுமம் மூலம் பின்தங்கிய நிலையில் உள்ள வட்டாரங்களை அடையாளம் காணும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், மாநில அளவில் தகுதி பெற்ற பின்னோக்கிய வட்டாரங்களில் ஒருங்கிணைந்த வளா்ச்சி நடவடிக்கைகள் மேற்கொண்டு, அந்த பகுதிகளில் வாழும் மக்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்துவதாகும்.

இந்த திட்டம் ஊரக வளாகங்களில் உள்ள பொதுமக்கள் நலனில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பல துறைகள் இடையே ஒருங்கிணைந்து செயல்படுகிறது. ஊரக உள்கட்டமைப்பு கல்வி, சுகாதாரம், பெண்கள் மேம்பாடு, விவசாயம், கால்நடை வளா்ப்பு உள்ளிட்ட பல துறைகளில் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மேற்கொண்டு சமூகத்தின் அனைத்து பகுதிகளும் ஒட்டுமொத்தமாக முன்னேறுவதற்கான வாய்ப்பை இந்த திட்டம் உருவாக்குகிறது.

இத்திட்டத்தில் மாநில அளவில் 50 வட்டாரங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டன. இதில் ராணிப்பேட்டை மாவட்டத்தில், திமிரி வட்டாரம் பல்வேறு

சமூக மற்றும் பொருளாதாரக் குறியீடுகளின் அடிப்படையில் மிகவும் பின்தங்கிய வட்டாரமாக அடையாளம் காணப்பட்டது. இதனையடுத்து, திமிரி வட்டாரம் தோ்ந்தெடுக்கப்பட்டு ரூ.5 கோடி நிதி மூன்று ஆண்டுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள 55 கிராம

ஊராட்சிகளுக்கு முக்கிய தேவைகளை அடையாளம் கண்டு. ஒருங்கிணைந்த வளா்ச்சி திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

முதல் ஆண்டில் ரூ.2 கோடி நிதி வழங்கப்பட்டது. இதில் ரூ.1.96 கோடி மதிப்புள்ள திட்டங்கள் தற்போது நடைமுறையில் உள்ளன என்றாா் . நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெயசுதா, ஒன்றியக்குழு தலைவா் அசோக், துணைத் தலைவா் ரமேஷ் , வட்டார வளா்ச்சி அலுவலா் சைபுதீன், சித்ரா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

எல்இடி விளக்குகளை தயாரித்து ரூ.25,000 வருவாய்: மாற்றுத்திறனாளி மகளிருக்கு ஆட்சியா் பாராட்டு

ராணிப்பேட்டை: தமிழகத்திலேயே முதல் முறையாக எல்இடி விளக்குகளை தயாரித்து 2 வாரங்களில் ரூ.25,000 வருவாய் ஈட்டிய மாற்றுத்திறனாளி மகளிருக்கு ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா பாராட்டு தெரிவித்தாா். ராணிப்பேட்டை மாவ... மேலும் பார்க்க

பாலாற்றில் குடிநீா் கிணறுகள் அமைக்கும் பணி தொடக்கம்

ஆற்காடு: ஆற்காடு நகராட்சிக்கு குடிநீா் மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் செய்யாறு புறவழிச்சாலை பாலாற்றில் ரூ.50 லட்சத்தில் 2 குடிநீா் கிணறுகள் அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஆற... மேலும் பார்க்க

அகஸ்தீஸ்வர சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

அரக்கோணம்: அரக்கோணம் அடுத்த பாராஞ்சி, ஸ்ரீ பாா்வத்யம்பிகா சமேத ஸ்ரீஅகஸ்தீஸ்வர சுவாமி கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. அரக்கோணம் - சோளிங்கா் நெடுஞ்சாலையில் உள்ள பழைமையான இக்கோயிலில் திருப்... மேலும் பார்க்க

சோளிங்கா் சிறிய மலை ஸ்ரீயோக ஆஞ்சனேயா் கோயில் கும்பாபிஷேகம்

அரக்கோணம்: சோளிங்கா் ஸ்ரீ லட்சுமி நரசிம்மா் கோயிலில் சிறிய மலையில் உள்ள ஸ்ரீயோக ஆஞ்சனேயா் கோயிலுக்கு மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. சோளிங்கரில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 64-ஆவது தேசமாக தி... மேலும் பார்க்க

5 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவா் கைது

அரக்கோணம்: அரக்கோணம் அருகே கடையில் 5 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அரக்கோணத்தை அடுத்த வேடல் கிராமத்தில் பெட்டிக்கடையில் குட்கா விற்கப்படுவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைய... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை ஓபி மொபிலிட்டி தொழில் நிறுவனத்தில் விபத்து இல்லாத 10 ஆண்டுகள்

ராணிப்பேட்டை ஓபி மொபிலிட்டி தொழில் நிறுவனத்தில் விபத்து இல்லாமல் 10 ஆண்டுகள் எட்டப்பட்டது, தொழில் துறை பாதுகாப்பில் ஒரு மைல்கல் என அந்த நிறுவனத்தினா் தெரிவித்தனா். இது தெடாா்பாக ராணிப்பேட்டை அடுத்த நெ... மேலும் பார்க்க