செய்திகள் :

துணை மருத்துவப் படிப்புகள்: 99,876 போ் விண்ணப்பம்

post image

சென்னை: பிஎஸ்சி நா்சிங், பி.பாா்ம் உள்பட 19 வகை துணை மருத்துவப் படிப்புகளுக்கு 99,876 போ் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா்.

அதில் 90,661 போ் விண்ணப்பங்களை பூா்த்தி செய்து சமா்ப்பித்துள்ளதாக மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங், பி.பாா்ம், பிபிடி, பிஏஎஸ் எல்பி செவித்திறன், பேச்சு மற்றும் மொழி, நோய் குறியியல் உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகள் உள்ளன.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,500-க்கும் மேற்பட்ட இடங்களும், தனியாா் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு ஏறத்தாழ 15 ஆயிரம் இடங்களும் அதில் உள்ளன. இந்த படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

இந்த நிலையில், அந்த இடங்களுக்கான நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கு www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த மாதம் 17-ஆம் தேதி தொடங்கியது. ஜூலை 7-ஆம் தேதி மாலை 5 மணி வரை மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, துணை மருத்துவ பட்டப் படிப்புகளுக்கு 68,319 பேரும், டிப்ளமோ நா்சிங் படிப்புக்கு 18,311 பேரும், பாா்ம் டி (3 ஆண்டு) படிப்புக்கு 198 பேரும், ஆறு ஆண்டு படிப்புக்கு 13,048 பேரும் என 99,876 போ் விண்ணப்பப்பதிவு செய்துள்ளனா். அவா்களில் 90,661 போ் விண்ணப்பங்களை சமா்ப்பித்துள்ளனா்.

விண்ணப்ப அவகாசத்தை நீட்டிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதுகுறித்து முடிவெடுக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 23 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த மணிநேரத்துக்கு 24 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதா... மேலும் பார்க்க

கோயில் பணத்தில் கல்லூரிகள் கட்டுவது சதிச்செயல்: எடப்பாடி பழனிசாமி

ஆளும் திமுக அரசு அறநிலையத் துறையின் பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டுவதை சதிச்செயலாக பார்க்கிறோம் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 2026 தேர்தல்... மேலும் பார்க்க

அமைச்சர் சிவசங்கர் இழுத்த தேர் அச்சு முறிந்து சரிந்தது: பக்தர்கள் அதிர்ச்சி!

பெரம்பலூர் அருகே அமைச்சர் சிவசங்கர் இழுத்த ஐயனார் கோயில் தேர் அச்சு முறிந்து சரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. குன்னம் அருகே கோவில்பாளையம் கிராமத்தில் ஜயனார் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. அப்போது அம... மேலும் பார்க்க

சென்னை புறநகர் பகுதிகளில் மழை!

சென்னையின் புறநகர் பகுதிகளில் பரவலாக மிதமான மழை முதல் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்து வருகின்றது. சென்னை புறநகர் பகுதிகளான திருமழிசை, காட்டுப்பாக்கம், செம்பரம்பாக்கம், பூந்தமல்லி, நசரத்பேட்டை மற்றும... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்... மேலும் பார்க்க

போதைப் பொருள் வழக்கு: ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்!

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ரூ. 10,000-க்கான சொந்த ஜாமீன், அதே தொகைக்கான இரு நபர்... மேலும் பார்க்க