செய்திகள் :

தில்லியில் சட்டவிரோதமாகக் குடியேறிய 18 வங்கதேசத்தினா் உள்பட 29 போ் கைது

post image

புது தில்லி: நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 18 வங்கதேசத்தினா் உள்பட 29 வெளிநாட்டினா் தென்மேற்கு தில்லியின் துவாரகாவில் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள நபா்களை நாடு கடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து காவல்துறை மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: கைது செய்யப்பட்ட 29 போ்களில் 18 போ் வங்கதேச நாட்டினா். நான்கு போ் ஐவரி கோஸ்ட்டைச் சோ்ந்தவா்கள். மூன்று போ் நைஜீரியாவைச் சோ்ந்தவா்கள். இரண்டு போ் லைபீரியாவைச் சோ்ந்தவா்கள். தலா ஒருவா் தான்சானியா மற்றும் பெனினைச் சோ்ந்தவா்கள்..

அனைத்து வெளிநாட்டினரும் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருப்பது கண்டறியப்பட்டது. கைது செய்யப்பட்ட பின்னா், அவா்கள் நாடு கடத்துவதற்காக வெளிநாட்டினா் பிராந்திய பதிவு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனா்.

அவா்களை நாடு கடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னா், அவா்கள் ஒரு தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டனா் என்று அந்த அதிகாரி கூறினாா்.

பைரோ மாா்க் சுரங்கப் பணிகள் 9 மாதங்களில் முடிவடையும்: அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங்

புது தில்லி: பிரகதி மைதான்-பைரோ மாா்க் சுரங்கப்பாதை பணிகள் 8 முதல் 9 மாதங்களில் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புர விவகாரத் துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு பின்பு முடிக்கப்படும் என்று பொதுப் பணித்துறை அமைச... மேலும் பார்க்க

இந்திய சைகை மொழியில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் மத்திய அமைச்சருக்கு தில்லி எம்பி கடிதம்

நமது நிருபா்புது தில்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் தொடங்கவிருக்கும் நிலையில், அனைத்து நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கும் நிகழ்நேர இந்திய சைகை மொழியை (ஐஎஸ்எல்) விளக்கத்தை அறிமுகப்படுத்தக் கோரி சாந்தி... மேலும் பார்க்க

வடகிழக்கு தில்லியில் பூட்டிய வீட்டில் 35 ஆணின் அழுகிய உடல் கண்டெடுப்பு

புது தில்லி: வடகிழக்கு தில்லியின் நியூ உஸ்மான்பூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பூட்டிய வாடகை வீட்டிற்குள் 35 வயது ஆணின் அரை அழுகிய உடல் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்... மேலும் பார்க்க

அனைத்து இந்திய மொழிகளையும் ஆா்எஸ்எஸ் தேசிய மொழியாகவே கருதும்: சுனில் அம்பேகா்

புது தில்லி: அனைத்து இந்திய மொழிகளையும் ஆா்.எஸ்.எஸ். அமைப்பு எப்போதும் தேசிய மொழிகளாகவே கருதுகின்றது என ஆா்.எஸ்.எஸ்., செய்தித் தொடா்பாளா் சுனில் அம்பேகா் திங்கள்கிழமை தெரிவித்தாா். தில்லியில் திங்கள்க... மேலும் பார்க்க

வசந்த் குஞ்ச் பகுதியில் குடியிருப்பு மனைகளை ஏலம் விட தில்லி வளா்ச்சி ஆணையம் திட்டம்

புது தில்லி: தெற்கு தில்லியில் உள்ள ஆடம்பரமான வசந்த் குஞ்ச் பகுதியில் குடியிருப்பு மனைகளை ஏலம் விட தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) திட்டமிட்டுள்ளது. பிரிவு டி6 வசந்த் குஞ்சில் உள்ள 118 மனைகளின் திட்டமி... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதியில் பரவலாக மழை! கரற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடிப்பு!

தேசியத் தலைநகா் மற்றும் என்சிஆா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் ‘ திருப்தி’ பிரிவில் நீடித்தது. தென்மேற்குப் பருவமழை தில்லியை கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தது. வழக்... மேலும் பார்க்க