செய்திகள் :

ரஷியாவில் பதவி பறிக்கப்பட்ட விரக்தியில் துப்பாக்கியால் சுட்டு அமைச்சர் தற்கொலை? என்ன நடந்தது?

post image

ரஷியாவில் அதிபர் விளாதிமீர் புதினால் பதவியிலிருந்து விலக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தனக்கு பரிசாகக் கிடைத்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ரஷிய அரசாங்கத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் ரோமன் ஸ்டாரோவாய்ட். அவரை அதிபர் புதின் பதவியிலிருந்து நீக்கி திங்கள்கிழமை(ஜூலை 7) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ரஷியாவில் உக்ரைன் நடத்திய வான் வழி ட்ரோன் தாக்குதல்களால் விமான சேவையில் ஏற்பட்ட குளறுபடிகளைத் தொடர்ந்து, அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. அவர் ஆளுநர் பதவி வகித்தபோது அரசு பணத்தை முறைகேடாக செலவழித்தாதகவும் குற்றச்சாட்டு உள்ளது. ரோமன் ஸ்டாரோவாய்ட்டை நீக்கிவிட்டு அப்பதவியில், அவருக்கடுத்த நிலையில் பொறுப்பு வகித்த ஆண்ட்ரே நிகிடின் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனால் மனமுடைந்த திங்கள்கிழமை(ஜூலை 7) முன்னாள் அமைச்சர் தமக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட சிறிய துப்பாக்கியால் சுட்டு தன்னைத்தானே மாய்த்துக் கொண்டார் என்று கூறப்படுகிறது. அவருக்கு வயது 53.

எனினும், அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதற்கும் அவரது மரணத்துக்கும் சம்பந்தமில்லை என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

Roman Starovoit, Russias Former Transport Minister, Shoots Self

டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 88-ஆக உயா்வு

ஹன்ட்: டெக்ஸஸில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 88-ஆக உயா்ந்துள்ளது. இதில், குவாடலூப் நதிக்கரையில் அமைந்திருந்த கேம்ப் மிஸ்டிக் என்ற கோடைகால முகாமில் 27 சிறுமிகளும் அடங்குவா். இது க... மேலும் பார்க்க

ஹூதிக்கள் தாக்குதல்: கடலுக்குள் மூழ்கிய மற்றொரு சரக்குக் கப்பல்

துபை: செங்கடல் வழியாகச் சென்ற மற்றொரு சரக்குக் கப்பல் மீது யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் நடத்திய தாக்குதலில் அந்தக் கப்பல் மூழ்கியது. இந்தச் சம்பவத்தில் மாலுமி ஒருவா் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்... மேலும் பார்க்க

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை: ஆக. 1 முதல் அமல்!

இந்தியா உள்ளிட்ட ஏறத்தாழ உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதியாகும் பொருள்களுக்கு கூடுதலாக வரி விதிக்கும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கை ஆகஸ்ட் 1-ஆம் தேதிமு... மேலும் பார்க்க

இந்தியா மீது கூடுதலாக 10% வரி? அமெரிக்கா எதிர்ப்பு கொள்கைகளுக்கு டிரம்ப் பதிலடி!

அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கையில் புதிய அப்டேட் கிடைத்துள்ளது. ஆம்... அப்படித்தான் சொல்லியாக வேண்டும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்கள் மீதான அ... மேலும் பார்க்க

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: மக்கள் வெளியேற அறிவுறுத்தல்!

இந்தோனேசியா நாட்டிலுள்ள லெவொடோபி லகி லகி எரிமலை சுமார் 18 கிலோ மீட்டர் உயரத்திற்கு வெடித்ததால் அப்பகுதி முழுவதும் படலம் மற்றும் புகைப் பரவியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்தோனேசியாவின் புவியியல்... மேலும் பார்க்க

புதிய கட்சி தொடங்கினாா் எலான் மஸ்க்: டிரம்ப்புடனான மோதல் எதிரொலி!

அமெரிக்காவின் பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க், அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப்புடனான மோதலைத் தொடா்ந்து ‘அமெரிக்கா கட்சி’ எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினாா். அமெரிக்க மக்களுக்கு தங்களின் சுதந்தி... மேலும் பார்க்க