இருளிலும், இக்கட்டிலும் மாட்டியிருப்பது இபிஎஸ்தான்: அமைச்சா் துரைமுருகன்
இந்தியா மீது கூடுதலாக 10% வரி? அமெரிக்கா எதிர்ப்பு கொள்கைகளுக்கு டிரம்ப் பதிலடி!
அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கையில் புதிய அப்டேட் கிடைத்துள்ளது. ஆம்... அப்படித்தான் சொல்லியாக வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்கள் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரி வதிப்பு இன்னும் ஒருபடி அதிகரித்துள்ளது. அமெரிக்கா எதிர்ப்பு கொள்கைகளைப் பின்பற்றும் நாடுகள் மீது கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்படும் என்று கறாராக எச்சரித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இதனை அவர் திங்கள்கிழமை(ஜூலை 7) அறிவித்துள்ளார்.
என்ன காரணம்?
பிரேசிலில் ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 6) தொடங்கி நடைபெற்றது. இந்த மாநாட்டில் முக்கிய அறிக்கையாக, ஈரான் மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதேபோல, மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணங்கள் குறித்தும் பிரிக்ஸ் நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. எனினும், அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் பெயர்களை நேரடியாகக் குறிப்பிட்டு பிரிக்ஸ் மாநாட்டில் கண்டனம் தெரிவிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
பிரிக்ஸ் அரிக்கை: ‘ஈரான் மீதான கடந்த ஜூன் 13-ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதல்கள் சர்வதேச சட்டங்களை மிக வெளிப்படையாக மீறும் நடவடிக்கையாகும்.
மத்திய கிழக்கில்(குறிப்பாக ஈரானில்) மக்கள் வசிப்பிடங்கள், அணுசக்தி வளாகங்கள் ஆகியவற்றின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பது சர்வதேச சட்டங்களை மீறிய கண்டிக்கத்தக்க நடவடிக்கை.
அணு சக்தி பாதுகாப்புக்கு எப்போதுமே முன்னுரிமை அளிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக, போர் நடவடிக்கைகள் நடைபெறும்போதும், அணுசக்தி பாதுகாப்பு மீறப்படாமல் செயல்பட வேண்டும்.
இவ்விவகாரத்தில் அப்பிராந்தியத்திலுள்ள சவால்களை எதிர்கொள்ள, தூதரக ரீதியிலான முன்னெடுப்புகளுக்கு நாங்கள்(பிரிக்ஸ்) ஆதரவளிக்கிறோம். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கவனத்துக்கும் இதனை கொண்டு செல்கிறோம்” என்று பிரிக்ஸ் நாடுகளால் வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்கா, இஸ்ரேல் மட்டுமின்றி எந்தவொரு நாட்டையும் வெளிப்படியாக குறிப்பிடவில்லை.
அந்த அறிக்கையில், அமெரிக்காவால் இன்றிலிருந்து தொடங்கப்படும் புதிய வரி விதிப்பு நடவடிக்கை உலகளவில் வர்தகத்தில் ஏற்படுத்தும் பாதிப்பைச் சுட்டிகாட்டி உலக வர்த்தக நிறுவன விதிகளுக்கு எதிராக இருப்பதாக குறிப்பிட்டு கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பிரிக்ஸ் மாநாட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அடுத்த நாளே டிரம்ப் வெளியிட்டுள்ளதொரு அறிவிப்பில், ‘பிரிக்ஸ் கூட்டமைப்பின் அமெரிக்காவுக்கு எதிரான கொள்கைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும் எந்தவொரு நாட்டின் மீதும் ஏற்கெனவே நடைமுறையிலிருக்கும் வரியுடன் கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப்படும். அமெரிக்காவின் இந்த கொள்கையில் எவ்வித தளர்வும் இருக்காது’ என்று தெரிவித்து எச்சரித்திருக்கிறார்.
எனினும், ஈரான் விவகாரம் குறித்து பிரிக்ஸ் மாநாட்டில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் பற்றி டிரம்ப் எதுவும் வெளிப்படையாக பேசவில்லை. அமெரிக்காவுக்கு எதிரான கொள்கைகளாக அவர் குறிப்பிடும் நடவடிக்கைகள் என்னென்ன? என்பதைப் பற்றி எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் இந்தியாவும் ஓர் அங்கம் என்பதால் டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை நேரடியாக இந்தியாவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.