செய்திகள் :

ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை சரிவு!

post image

புதுதில்லி: ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில், கார்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு 11% சரிந்து 87,286 ஆக குறைந்துள்ளதாக ஜாகுவார் லேண்ட் ரோவர் தெரிவித்துள்ளது.

முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது, ​​வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தில் முதல் காலாண்டில் மொத்த விற்பனை முறையே 12%, 14% மற்றும் 25% குறைந்துள்ளதாக ஜேஎல்ஆர் தெரிவித்துள்ளது.

பாரம்பரிய ஜாகுவார் மாடல்களை நிறுத்த திட்டமிட்டதால் இங்கிலாந்து சந்தை மிகவும் பாதிக்கப்பட்டதாக நிறுவனம் மேலும் தெரிவித்தது.

இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலகட்டத்தில் அதன் சில்லறை விற்பனை 94,420 யூனிட்களாக இருந்ததாகவும், இது கடந்த நிதியாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 15 சதவிகிதம் குறைவு என்றும் பிரிட்டிஷ் மார்க்யூ பிராண்ட் தெரிவித்துள்ளது.

சவாலான காலாண்டைத் தொடர்ந்து நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப கார்களின் எண்ணிக்கையும் குறைத்துள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய ஜாகுவார் அறிமுகத்திற்கு முன்னதாக பாரம்பரிய ஜாகுவார் மாடல்களின் திட்டமிடப்பட்ட நிறுத்தத்தையும், அதனிடையில் அமெரிக்காவில் அதன் இறக்குமதி குறித்த வரிகள் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஏப்ரல் 2025ல் முதல் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி நிறுத்தப்பட்டதையும் இது பிரதிபலிக்கிறது.

இன்றைய வர்த்தகத்தில் டாடா மோட்டார்ஸ் பங்குகள் பிஎஸ்இ-யில் ரூ.688.85 ஆக முடிவடைந்தது.

இதையும் படிக்க: டிவிஎஸ் ஜூபிடர் நேபாளத்தில் அறிமுகம்!

Jaguar Land Rover said its dispatches to dealers declined by 11 per cent to 87,286 units for the first quarter ended June 30.

டிவிஎஸ் ஜூபிடர் நேபாளத்தில் அறிமுகம்!

சென்னை: டிவிஎஸ் மோட்டார்ஸ் இன்று அதன் இரு சக்கர வாகனமான டிவிஎஸ் ஜூபிடர் 110 சிசி வாகனத்தை நேபாளத்தில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது.இரு சக்கர வாகனம் மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியாளரான டிவிஎஸ் ம... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 47 காசுகள் சரிந்து ரூ.85.87 ஆக முடிவு!

மும்பை: உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் வலுவான அமெரிக்க நாணய மதிப்பு ஆகியவற்றின் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 47 காசுகள் சரிந்து ரூ.85.87 ஆக ... மேலும் பார்க்க

அமேசான் பிரைம் விற்பனையில் அறிமுகமாகும் புதிய ஸ்மார்ட்போன்!

ஹானர் எக்ஸ் 9 சி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் நிறுவனத்தின் பிரைம் விற்பனை நாளான ஜூலை 12 ஆம் தேதி இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது.ஜூலை மாதத்தி... மேலும் பார்க்க

அமெரிக்க கட்டண காலக்கெடுவுக்கு முன்னதாக ஏற்ற-இறக்கத்துடன் சென்செக்ஸ், நிஃப்டி முடிவு!

மும்பை: ஜூலை 9 அமெரிக்க கட்டண காலக்கெடுவுக்கு முன்னதாக, ஆசிய சந்தைகளில் ஏற்பட்ட பலவீனமான போக்குகள் மற்றும் அந்நிய நிதி வெளியேற்றத்துக்கு மத்தியில், பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் ந... மேலும் பார்க்க

ஜூன் மாதத்தில் மின்சார கார்களின் விற்பனை அதிகரிப்பு!

சென்னை: ஜூன் 2025ல் மின்சார கார்களின் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும், அதே நேரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் இயங்கும் கார் விற்பனை கடந்த மாதம் சரிந்ததாக தெரிவித்துள்ளது ஸ்ரீராம் ஃபைனான்ஸின... மேலும் பார்க்க

உற்பத்தித் துறையில் 14 மாதங்கள் காணாத வளா்ச்சி

இந்திய உற்பத்தித் துறை கடந்த ஜூன் மாதத்தில் 14 மாதங்களில் இல்லாத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... மேலும் பார்க்க