செய்திகள் :

அமெரிக்க கட்டண காலக்கெடுவுக்கு முன்னதாக ஏற்ற-இறக்கத்துடன் சென்செக்ஸ், நிஃப்டி முடிவு!

post image

மும்பை: ஜூலை 9 அமெரிக்க கட்டண காலக்கெடுவுக்கு முன்னதாக, ஆசிய சந்தைகளில் ஏற்பட்ட பலவீனமான போக்குகள் மற்றும் அந்நிய நிதி வெளியேற்றத்துக்கு மத்தியில், பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கிட்டத்தட்ட மாறாமல் முடிவடைந்தன.

இன்றைய மத்திய நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 83,516.82 புள்ளிகளும் குறைந்தபட்சமாக 83,262.23 புள்ளிகளாக இருந்தது. உயர்விற்கும், தாழ்விற்கும் இடையில் ஊசலாடிய நிலையில், 30-பங்கு கொண்ட சென்செக்ஸ் இறுதியாக 9.61 புள்ளிகள் உயர்ந்து 83,442.50 புள்ளிகளாகவும் 50-பங்கு கொண்ட நிஃப்டி மாறாமல் 25,461.30 ஆக முடிந்தன.

ஜூலை 9 அன்று இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு டிரம்ப் விதித்த 90 நாள் கெடு முடிவடைகிறது. இதன் அடிப்படையில், அமெரிக்காவிற்குள் நுழையும் இந்தியப் பொருட்களுக்கு 26 சதவிகித கூடுதல் இறக்குமதி வரி அறிவிக்கப்பட்டது.

இதனிடையில் அமெரிக்க-இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தைச் சுற்றியுள்ள கவலைகளுக்கு மத்தியில் நிலையற்ற போக்குகள் சந்தைகளை ஏற்ற-இறக்கத்துடன் வைத்திருந்ததாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க கட்டண அறிவிப்புகளுக்கு முன்னதாக, முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்ததால், அமர்வு முழுவதும் குறியீடு பெரும்பாலும் குறுகிய வரம்பில் வர்த்தகமானது.

சென்செக்ஸில் இந்துஸ்தான் யூனிலீவர், கோடக் மஹிந்திரா வங்கி, டிரென்ட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் ஐடிசி ஆகியவை உயர்ந்து முடிந்தன. அதே வேளயைில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், டெக் மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமென்ட், மாருதி மற்றும் எடர்னல் ஆகியவை சரிந்து முடிவடைந்தன.

நிஃப்டி-யில் டெக் மஹிந்திரா, பாரத் எலக்ட்ரானிக்ஸ், அல்ட்ராடெக் சிமென்ட், ஓஎன்ஜிசி, எடர்னல் ஆகியவை சரிந்து முடிந்த நிலையில் எச்யூஎல், டாடா கன்ஸ்யூமர், நெஸ்லே இந்தியா, ஜியோ பைனான்சியல் மற்றும் ஐஷர் மோட்டார்ஸ் ஆகியவை சரிந்து முடிந்தன.

துறை வாரியாக எஃப்எம்சிஜி குறியீடு 1.6 சதவிகிதமும், எண்ணெய் மற்றும் எரிவாயு குறியீடு 0.4 சதவிகிதம் உயர்ந்தது. அதே நேரத்தில் மீடியா குறியீடு 1 சதவிகிதமும், ஐ.டி. மற்றும் உலோக குறியீடு தலா 0.7 சதவிகிதம் சரிந்ததன.

பங்கு சார்ந்த நடவடிக்கையில், முதல் காலாண்டு வணிக புதுப்பிப்புக்குப் பிறகு நைக்கா பங்குகள் உயர்ந்தன.

ரூ.913 கோடி மதிப்புள்ள ஆர்டர்களை பெற்ற நிலையில் ஹசூர் மல்டி ப்ராஜெக்ட்ஸ் (Hazoor Multi Projects) பங்குகள் 15% க்கும் அதிகமாக உயர்ந்த நிலையில் மும்பையில் மறுவளர்ச்சி உரிமைகளைப் புரவன்கரா நிறுவனம் பெற்றதால் அதன் பங்குகள் 3.6% உயர்ந்ன.

ஸ்பெயினில் புதிய புற்றுநோய் எதிர்ப்பு மூலக்கூறுக்கான ஐரோப்பிய காப்புரிமை சரிபார்க்கப்பட்ட நிலையில், கோதாவரி பயோ-ரிஃபைனரீஸின் பங்குகள் சரிவுடன் முடிந்தன.

மார்ச் காலாண்டு லாபம் 36% உயர்ந்த நிலையில், வருவாய் ஆண்டுக்கு 57% உயர்ந்த பிறகு சீமென்ஸ் எனர்ஜியின் பங்குகள் 4% உயர்ந்தன.

டோமினோவின் துருக்கி விற்பனை வளர்ச்சி முதல் காலாண்டில் (Q1) மந்தமாக இருந்ததால் ஜூபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ் பங்குகள் 4% சரிவு.

க்ளென்மார்க் பார்மா, எல்டி ஃபைனான்ஸ், அப்பல்லோ மருத்துவமனைகள், நவின் ஃப்ளூரின், ஈஐடி பாரி, ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், லாரஸ் லேப்ஸ், முத்தூட் ஃபைனான்ஸ், ராம்கோ சிமென்ட்ஸ், காமா ஹோல்டிங்ஸ் உள்ளிட்ட 150 பங்குகள் பிஎஸ்இ-யில் 52 வார உச்சத்தைத் தொட்டன.

ஆசிய சந்தைகளில் ஜப்பானின் நிக்கேய் 225 குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் சரிவுடன் முடிவடைந்தன. தென் கொரியாவின் கோஸ்பி மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு உயர்ந்து முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகள் கலவையான குறிப்பில் வர்த்தகமானது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க சந்தைகள் உயர்ந்து முடிவடைந்தன.

இதையும் படிக்க: ஜூன் மாதத்தில் மின்சார கார்களின் விற்பனை அதிகரிப்பு!

Benchmark indices ended flat with Nifty hovering around 25,450 as investors turned cautious ahead of likely development around the US-India trade deal.

ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை சரிவு!

புதுதில்லி: ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில், கார்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு 11% சரிந்து 87,286 ஆக குறைந்துள்ளதாக ஜாகுவார் லேண்ட் ரோவர் தெரிவித்துள்ளது.முந்தைய ஆண்டை ஒப்பிடும்போத... மேலும் பார்க்க

டிவிஎஸ் ஜூபிடர் நேபாளத்தில் அறிமுகம்!

சென்னை: டிவிஎஸ் மோட்டார்ஸ் இன்று அதன் இரு சக்கர வாகனமான டிவிஎஸ் ஜூபிடர் 110 சிசி வாகனத்தை நேபாளத்தில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது.இரு சக்கர வாகனம் மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியாளரான டிவிஎஸ் ம... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 47 காசுகள் சரிந்து ரூ.85.87 ஆக முடிவு!

மும்பை: உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் வலுவான அமெரிக்க நாணய மதிப்பு ஆகியவற்றின் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 47 காசுகள் சரிந்து ரூ.85.87 ஆக ... மேலும் பார்க்க

அமேசான் பிரைம் விற்பனையில் அறிமுகமாகும் புதிய ஸ்மார்ட்போன்!

ஹானர் எக்ஸ் 9 சி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் நிறுவனத்தின் பிரைம் விற்பனை நாளான ஜூலை 12 ஆம் தேதி இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது.ஜூலை மாதத்தி... மேலும் பார்க்க

ஜூன் மாதத்தில் மின்சார கார்களின் விற்பனை அதிகரிப்பு!

சென்னை: ஜூன் 2025ல் மின்சார கார்களின் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும், அதே நேரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் இயங்கும் கார் விற்பனை கடந்த மாதம் சரிந்ததாக தெரிவித்துள்ளது ஸ்ரீராம் ஃபைனான்ஸின... மேலும் பார்க்க

உற்பத்தித் துறையில் 14 மாதங்கள் காணாத வளா்ச்சி

இந்திய உற்பத்தித் துறை கடந்த ஜூன் மாதத்தில் 14 மாதங்களில் இல்லாத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... மேலும் பார்க்க