செய்திகள் :

`காலா பாணி - நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை' - இப்போது விகடன் பிளேயில் ஆடியோ வடிவில்!

post image

இந்திய விடுதலைப் போராட்டத்தின் தியாகச் சரித்திரத்தைத் தொடங்கி வைத்த பெருமை கொண்டது தென் தமிழகம்.

வீரம் நிறைந்த அதன் ரத்த சரித்திரத்தின் துவக்கப் புள்ளியாய் இருந்த புலித்தேவன், வீரபாண்டிய கட்ட பொம்மன், ஊமைத் துரை, மருது பாண்டியர்களைத் தொடர்ந்து சிவகங்கை அரசர் வேங்கை பெரிய உடையணத் தேவனும் தன் உயிரைத் துறந்தார்.

தங்கள் ஏகாதிபத்தியத்தை எதிர்பவர்களின் நிலை இதுதான் என்று எச்சரிக்கவே பெரிய உடையணத் தேவனையும் போராளிகள் 72 பேரையும் பினாங்கிற்கு ‘காலா பாணி’ என்றழைக்கப்பட்ட நாடு கடத்தலை ஆயுதமாக்கியது ஆங்கில அரசு.

காலா பாணி - நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை - இயக்குநர் வசந்தபாலன்
காலா பாணி - நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை - இயக்குநர் வசந்தபாலன்

இதனை டாக்டர் மு. ராஜேந்திரன் IAS, வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் கற்பனை கலந்து `காலா பாணி - நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை' என்ற பெயரில் நாவலாக எழுதியிருந்தார்.

அகநி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்நாவல், 2022-ம் ஆண்டு சாகித்திய அகாடெமி விருது பெற்றது.

இந்த நிலையில், இந்நாவல் தற்போது ஆடியோ வடிவில் வெளியிடப்பட்டிருக்கிறது.

`காலா பாணி - நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை' என்ற நாவல் ஆடியோ வடிவில் வெளியிடும் நிகழ்ச்சி
`காலா பாணி - நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை' என்ற நாவல் ஆடியோ வடிவில் வெளியிடும் நிகழ்ச்சி

இது விகடன் பிளேயில் (Vikatan Play) 35 எபிசோட்களாக வெளிவந்திருக்கிறது.

காலா பாணி - நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை - கேட்க கிளிக் செய்க!

இதன் வெளியீட்டு வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

இதனை இயக்குநர் வசந்தபாலன் வெளியிட, எழுத்தாளர் அ.வெண்ணிலா, கவிஞர் தங்கம் மூர்த்தி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் கவிஞர் மு.முருகேஷ் மற்றும் விகடனின் சீப் டிஜிட்டல் கண்டன்ட் எடிட்டர் எஸ்.கே. பிரேம்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

காத்திருக்க வேண்டாம்! - குறுங்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

`அரசியலுக்கு வந்ததால் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லையா?’ - கவிஞர் மனுஷ்ய புத்திரன் பதில்கள்!

`சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு தலைவர், கவிஞர் மனுஷ்ய புத்திரன் அவர்களை சந்தித்து சமீபத்திய நிகழ்வுகள், அரசியல், கவிதை, புத்தகங்கள் என பல விஷயங்கள் குறித்து உரையாடினோம்... ``சமீபத்தில் நூலகங்களுக்கு புத... மேலும் பார்க்க

சைத்தான் முதல் நெல்லை ஜமீன்கள் வரை: Vikatan Play யின் Top 5 Audio Books

ரொம்ப பிசியாவே, ஓடிட்டு இருக்கிற இந்த வாழ்க்கையில நமக்கு கிடைக்கிற சிறிய நேரத்தை கூட ரொம்ப சுவாரசியமாகவும், பயனுள்ளதாகவும் audio books மாற்றிவிடுகிறது. பயணங்களில் உற்ற தோழனாக, நம் காலை நடைப்பயிற்சியில... மேலும் பார்க்க

``கொரிய மண்ணில், தமிழர் கலாச்சாரம்..'' - கொரிய தமிழரசி செம்பவளம் நினைவிடத்திற்கு பயணித்த தமிழர்கள்!

கொரிய தமிழ்ச் சங்கமும், தேகு இந்தியன்ஸ் அமைப்பும் ஒருங்கிணைந்து தென்கொரியாவின் புசான் மாநகரில் ஜுன் 28 அன்று சுற்றுலா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இச்சுற்றுலாவிற்கு, தேகு, போஹாங், புசான் ஆகிய பகுதியில... மேலும் பார்க்க

நான் அதிகம் வெறுத்த பேரன்பான என் அம்மைக்கு! - மகளின் மன்னிப்பு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

25 ஆண்டுகளாக எங்களுக்கு தாயுமானவனாய் இருந்த தந்தையே! - மகன் உருக்கம் | #உறவின்கடிதம்