செய்திகள் :

தேனி: லஞ்சம், முறைகேடான சொத்து... அரசு டாக்டருக்கு எதிராக மனு; பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

post image

தேனி அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர் சொப்ன ஜோதி, தன் கணவருடன் சேர்ந்து வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மத்திய அரசின் தேசிய சுகாதாரப் பணிகளின் கீழ் 2017 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட தற்காலிகப் பணியாளர்களிடம் டாக்டர் சொப்ன ஜோதி, தன் கணவருடன் சேர்ந்து லஞ்சம் பெற்று முறைகேடுகள் செய்துள்ளார்.

இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை.

மேலும், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளைத் தன்னுடைய மருத்துவமனைக்கும், பிற தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வருவதன் மூலம் பல கோடி வருவாய் ஆதாயம் பெற்றுள்ளார்.

அரசு ஊழியர் சொத்து வாங்கும்போது அரசின் அனுமதி பெற வேண்டும். ஆனால், இவர் எந்த அனுமதியும் பெறாமல் முறைகேடாக 20 கோடி ரூபாய் அளவுக்கு அவர் பெயரிலும் கணவர் பெயரிலும் சொத்துகளை வாங்கி குவித்துள்ளார்.

இதுகுறித்து மருத்துவத்துறை இயக்குநருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. உயர் நீதிமன்றமே விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், "இந்த வழக்கு குறித்து மருத்துவக் கல்வி இயக்குநர், லஞ்ச ஒழிப்புத்துறையினர் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

பீர் அருந்திக் கொண்டு நீதிமன்ற அமர்வில் கலந்துகொண்ட வழக்கறிஞர்; குஜராத் நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை

பீர் அருந்திக் கொண்டு நீதிமன்ற அமர்வில் கலந்து கொண்ட மூத்த வழக்கறிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடங்கி குஜராத் உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. வழக்கறிஞரின் இந்த செயலை 'மூர்க்கத்தனம்' என ... மேலும் பார்க்க

JEE: தேர்வறையில் பல்லி, தொழில்நுட்ப கோளாறு; வழக்கு தொடர்ந்த மாணவர் - அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

தேர்வறையில் பல்லியைக் காண நேரிட்டதால் தேர்வில் சரிவர கவனம் செலுத்த முடியவில்லை எனவும், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் தேர்வு எழுத இயலாமல் தவித்ததாகவும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மாணவரொருவர் வழக்கு தொ... மேலும் பார்க்க

Thug Life : `இந்த நிலைமை இப்படியே நீடித்தால்..!’ - கர்நாடக அரசுக்கு குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்

கன்னட மொழி பற்றி நடிகர் கமல்ஹாசன் பேசியதற்கு எதிராக அவர் நடித்த தக் லைப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் ச... மேலும் பார்க்க

ஏடிஜிபி ஜெயராமன் வழக்கு : மறுத்த தமிழக அரசு; சிபிசிஐடி-க்கு மாற்றிய உச்ச நீதிமன்றம் - நடந்தது என்ன?

திருத்தணி சிறுவன் கடத்தல் வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து விசாரணை வளையத்தில் இருந்த ஏடிஜிபி ஜெயராமன், தன் மீதான நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்... மேலும் பார்க்க

`ஏடிஜிபி ஜெயராமனை ஏன் இடைநீக்கம் செய்தீர்கள்?’ - தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி | முழு விவரம்

திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு பகுதியில் காதல் ஜோடி திருமணம் செய்த விவகாரத்தில், 17 வயது சிறுவனை பெண்ணின் தந்தை கடத்தியதும், அதில் புதிய பாரதம் கட்சித் தலைவர் எம்.எல்.ஏ பூவை ஜெகன் மூர்த்தி சம்பந்தப... மேலும் பார்க்க

ThugLife: `சட்டத்துக்கு மாறான விஷயங்களை..!’ - கர்நாடகா அரசை வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான “தக் லைஃப்” திரைப்படத்துக்கு கர்நாடகாவில் விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்ற விடுமுறை கால சிறப்பு அமர்வான ... மேலும் பார்க்க