செய்திகள் :

எஸ்.ஜே. சூர்யா படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரஹ்மான்!

post image

எஸ்.ஜே.சூர்யா இயக்கும் கில்லர் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, அண்மை காலமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழிப் படங்களிலும் நடிகராக மிரட்டிவரும் எஸ்.ஜே.சூர்யா மீண்டும் இயக்குராக களமிறங்கியது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடைசியாக 2015-இல் இசை எனும் படத்தை இயக்கியிருந்தார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு கில்லர் எனும் புதிய படத்தை இயக்குகிறார்.

கில்லர் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டிருப்பதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தில் நாயகனாக எஸ்.ஜே. சூர்யாவே நடிக்கிறார். நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார்.

இந்த நிலையில், பான் இந்திய படமாக உருவாகும் கில்லர் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஏற்கெனவே, எஸ்.ஜே. சூர்யா இயக்கியுள்ள நானி, அன்பே ஆருயிரே உள்ளிட்ட படங்களுக்கு ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

It has been announced that A.R. Rahman will compose the music for the film Killer, directed by S.J.Surya.

இதையும் படிக்க : காந்தாரா சேப்டர் - 1 ரிலீஸ் அப்டேட்!

ஜீ தமிழில் கூடுதல் நேரம் ஒளிபரப்பாகும் இரு தொடர்கள்! காரணம் என்ன?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அனைத்துத் தொடர்களும் அரை மணிநேரம் ஒளிபரப்பாகும் நிலையில், இரு தொடர்கள் கூடுதல் நேரத்துடன் ஒளிபரப்பாகவுள்ளன. தற்போது முன்னணி தொடர்களாக உள்ள வீரா மற்றும் கெட்டி மேளம் ஆகிய இரு ... மேலும் பார்க்க

விஜய் சேதுபதியின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று(ஜூலை 7) தொடங்கப்பட்டுள்ளது.கடந்த 2024 ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான 'மகாராஜா’ மற்றும்... மேலும் பார்க்க

ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்!

கோவை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.கோவை டவுன்ஹால் வைஸ்யாள் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் தேவஸ்தானம் கோவில் கும்... மேலும் பார்க்க

இந்த வார இறுதியில் நிறைவடையும் பிரபல தொடர்!

ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த தொடரான செவ்வந்தி தொடர் இந்த வார இறுதியில் நிறைவடைகிறது.சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'செவ்வந்தி' தொடர் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளது. இந்த தொடரில் திவ்... மேலும் பார்க்க

திருச்செந்தூர் முருகன் கோயிலில் மதியம் 2 மணி முதல் தரிசனம்!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று காலை குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில், மதியம் 2 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.திருச்செந்... மேலும் பார்க்க

டிமான்ட்டி காலனி - 3 படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

டிமான்ட்டி காலனி படத்தின் மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.திகில் கதையை மையமாக வைத்து கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் டிமாண்டி காலனி. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்க... மேலும் பார்க்க