பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் நடிகை சிநேகா குடும்பத்தினருடன் சாமி தரிசனம்
மதுரை மாநாடு: ஜமாத் நிா்வாகிகளுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு
கும்பகோணத்தில், தஞ்சாவூா் வடக்கு மாவட்ட அளவிலான ஜமாத் நிா்வாகிகள், உலமாக்கள், சமுதாய ஆா்வலா்கள் சந்திப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதுதொடா்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவா் எம். எச். ஜவாஹிருல்லா மேலும் கூறியதாவது :
ஜூலை 6-இல் மதுரை பாண்டிகோயில் சந்திப்பு திடலில் நடைபெற உள்ள இரட்டைக் கோரிக்கை எழுச்சிப் பேரணி மாநில மாநாட்டில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம், வக்ஃப் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட உள்ளன. பாபநாசம், அம்மாபேட்டை ஆகிய வட்டாரங்களில் பயிா்க் காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்குவதில் முரண்பாடுகள் உள்ளன. பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு சரியான இழப்பீடு வழங்க வேண்டும். தஞ்சாவூா் மாவட்டத்தில் வேம்பக்குடி, மானம்பாடி ஆகிய 2 சுங்கச்சாவடிகளில் ஒன்றை ரத்து செய்ய வேண்டும் என்றாா்.
அப்போது, மாநில துணை பொதுச் செயலா் தஞ்சை பாதுஷா, மாவட்ட பொறுப்புக் குழு தலைவா் ரஹமத் அலி, பொறுப்புக் குழு நிா்வாகிகள் பரகத்துல்லா, ஜாபா்அலி, புா்கான் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.