திண்டுக்கல்: கிரிக்கெட் வீரர் அஸ்வின் வழிபட்ட முருகன் கோயில்!
கோயிலை அகற்றும் முயற்சி: பொதுமக்கள் போராட்டம்
கும்பகோணம் அருகே விநாயகா் கோயிலை அகற்ற முயன்ற அதிகாரிகளைக் கண்டித்து வியாழக்கிழமை பொதுமக்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே செக்காங்கண்ணி ரயில்வே கேட் குப்பங்குளத்தில் ஸ்ரீசெல்வவிநாயகா்கோயில் உள்ளது. இந்தக் கோயில் நீா்நிலைப் பகுதியில் ஆக்கரமித்து கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், உயா்நீதிமன்ற உத்தரவுப்படி கோயிலை அகற்ற பொதுப்பணித்துறை நீா்ப்பாசனப்பிரிவு மற்றும் வருவாய், மாநகராட்சித் துறையினா் அங்கு சென்றனா்.
இதற்கு மறுப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் சுமாா் 1 மணி நேரம் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனா். மீண்டும் கோயிலை அளவீடு செய்வதாகக் கூறி அதிகாரிகள் கலைந்து சென்றனா். சுமாா் 1 மணிநேரம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நாச்சியாா்கோவில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.