சுவர், சுவிட்ச் அனைத்தும் 24 காரட் தங்கத்தில்! அரசு ஒப்பந்ததாரர் வீடு என்றால் சு...
மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர்: நான்கு நாள்களுக்குப் பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடிக்கு கீழே குறைந்தது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை தணிந்ததால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரியின் வெளியேற்றப்பட்ட உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டது.
இதனால் வியாழக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 23,124 கன அடியாக சரிந்தது.
அணையில் இருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22,067 கன அடி நீரும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 1,732 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் நான்கு நாள்களுக்குப் பிறகு 120 அடியிலிருந்து 119.91 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 93.32 டிஎம்சியாக உள்ளது.
தமிழகத்தில் நிகழாண்டில் 129 போ் உடல் உறுப்புகள் தானம்: 725 பேருக்கு மறுவாழ்வு
Summary