ரூ.19 லட்சத்தில் கால்வாய், சாலைப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்
அபிமன்யு ஈஸ்வரன்: `கருணுக்கு வாய்ப்பளிக்கிறார்கள்; என் மகன் அழுத்தத்தில் இருக்கிறான்’ - தந்தை வேதனை
இங்கிலாந்து vs இந்தியா டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி ஓவல் மைதானத்தில் நேற்று (ஜூலை 31) தொடங்கியது.
8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த கருண் நாயர், முதல் மூன்று போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் சொதப்பியதால் நான்காவது போட்டியில் பென்ச்சில் உட்காரவைக்கப்பட்டார். இருப்பினும், கடைசி போட்டியில் மீண்டும் ஒரு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், கடந்த 2022 முதல் இந்திய அணி டெஸ்ட் தொடர்களில் 15 பேர் கொண்ட அணிக்கு தேர்வுசெய்யப்படும் அபிமன்யு ஈஸ்வரனுக்கு பிளெயிங் லெவனில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்தான் நடப்பு இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் தனது மகனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அபிமன்யு ஈஸ்வரனின் தந்தை ரங்கநாதன் ஈஸ்வரன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
தனியார் ஊடகத்திடம் பேசிய ரங்கநாதன் ஈஸ்வரன், "அபிமன்யு தனது டெஸ்ட் அறிமுகத்திற்காக எத்தனை நாள்களாக காத்திருக்கிறார் என்று நான் கணக்கிடவில்லை.
எத்தனை ஆண்டுகளாக காத்திருக்கிறார் என்று நான் கணக்கிட்டு வருகிறேன். இதோடு மூன்று ஆகிவிட்டது.
அவர்கள் எப்படி ஒப்பிடுகிறார்கள் எனக்குப் புரியவில்லை!
ஒரு பேட்ஸ்மேனின் வேலை ரன் அடிப்பதுதான். அதை அவர் செய்திருக்கிறார்.
கடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது, இரண்டு இந்தியா ஏ போட்டிகளில் அவர் சிறப்பாகச் செயல்படாததால் பிளெயிங் லெவனில் இடம் பெறவில்லை என்று கூறினர். அதுகூட ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்.
ஆனால், பார்டர் கவாஸ்கர் தொடருக்கு முன்பு அபிமன்யு விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் கருண் நாயர் அணியிலேயே இல்லை.
துலீப் டிராபி அல்லது இரானி கோப்பை அடிப்படையில் கருண் நாயர் தேர்வு செய்யப்படவில்லை.

கடந்த ஆண்டு முதல் அவற்றில் அபிமன்யு 864 அடித்திருக்கிறார். அப்படியானால் அவர்கள் எப்படி ஒப்பிடுகிறார்கள் என்றே எனக்குப் புரியவில்லை.
அவர்கள் கருண் நாயர் மீது நம்பிக்கை வைத்து ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.
என் மகன் மன அழுத்தத்தில் இருக்கிறான். ஆனால், இது இப்படித்தான் நடக்கும்.
ஐ.பி.எல்லில் ஆடியதை வைத்து சிலர் அணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். ஆனால், ஐ.பி.எல் போட்டிகளை வைத்து டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யக்கூடாது.
ரஞ்சி டிராபி, துலீப் டிராபி, இரானி கோப்பை ஆகியவைதான் டெஸ்ட் அணித் தேர்வுக்கு அடிப்படையாக இருக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
அபிமன்யு ஈஸ்வரன் 103 முதல் தர போட்டிகளில் விளையாடி, 27 சதங்களும் 31 அரைசதங்களுடன் 48.70 ஆவரேஜில் 7,841 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...