ஊராட்சிகளில் தொழில் உரிமம் பெறும் நடைமுறைகளை எளிதாக்க ஆலோசனைக் குழு: முதல்வா் மு...
ENG vs IND: 'நான் மட்டும் கேப்டனா இருந்திருந்தா இங்கிலாந்து அணியை.!' - சுனில் கவாஸ்கர் காட்டம்
இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கிடையே மான்செஸ்டரில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
அந்தப் போட்டியில்`, ஹரி ப்ரூக், பென் டக்கெட் போன்ற பகுதி நேர பவுலர்களுக்கு எதிராக விளையாடித்தான் நீங்கள் சதத்தை அடிக்க விரும்புகிறீர்களா?’ என்று டிராவுக்கு ஒப்புக்கொள்ளாத ஜடேஜாவிடம் கேப்டன் ஸ்டோக்ஸ் கிண்டலாக கேட்டார்.

அப்படி இந்தியாவை கொச்சைப்படுத்திய ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்தை தாம் கேப்டனாக இருந்திருந்தால் எஞ்சிய நாள் முழுவதும் விளையாட வைத்து சோர்வடைய செய்து அனுப்பியிருப்பேன் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் விமர்சித்திருக்கிறார்.
இதுதொடர்பாக பேசிய சுனில் கவாஸ்கர் , “டெஸ்ட் போட்டியின் கடைசி மணி நேரத்தில் ஸ்டோக்ஸ் கை கொடுக்க வந்த போது எரிச்சலான இங்கிலாந்து வீரர்கள் ஜடேஜா மற்றும் சுந்தர் விளையாடுவதற்கு மறுப்பு தெரிவித்தார்கள். அதை ஏற்றுக்கொள்ளாத இந்திய பேட்ஸ்மேன்கள் சதத்தை அடித்தார்கள். எப்படியும் வெற்றி பெறப்போவதில்லை என்று உணர்ந்த இங்கிலாந்து வீரர்கள் இந்தியா தங்களுடைய முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தனர்.
இங்கிலாந்து மறந்து விட்டது
அங்கே இரு அணிகளும் ஒப்புக்கொண்டால் மட்டுமே போட்டி முடியும், இல்லையென்றால் எதிரணி முடிவை ஏற்க வேண்டும் என்பதை இங்கிலாந்து மறந்து விட்டது போல் தெரிகிறது. சொல்லப்போனால் 80களில் இருந்த இந்திய பேட்ஸ்மேன்களிடம் சதத்தை அடிக்க எங்களுடைய பேட்ஸ்மேன்களை பவுலிங் போட சொல்லட்டுமா? என இங்கிலாந்தினர் கிண்டல் செய்தனர்.
அப்படி கிண்டலடித்த அவர்கள் இங்கிலாந்தின் முன்னணி பவுலர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் 4 மணிநேரம் எதிர்கொண்டு 80 ரன்களை தொட்டனர் என்பதை மறந்து விட்டனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் சதத்தை அடிப்பது ஒவ்வொரு போட்டியிலும் நடக்காது.

எனவே இந்திய பேட்ஸ்மேன்கள் அதை தொடுவதற்கு தகுதியானவர்கள். ஒருவேளை நான் கேப்டனாக இருந்திருந்தால் இந்திய பேட்ஸ்மேன்களிடம் எஞ்சிய ஓவர்கள் முழுவதும் விளையாடி இங்கிலாந்து வீரர்களை இன்னும் சோர்வடைய வையுங்கள் என்று தெரிவித்திருப்பேன். குறிப்பாக அவர்களுடைய ட்ராவை ஏற்றுக்கொள்ளாத போது செய்த கிண்டல்களுக்காக அதை செய்திருப்பேன்” என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...