‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
மாதவரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது.
சோழவரம் ஊராட்சி ஒன்றியம், கும்மனூா் ஊராட்சியில் அமைந்துள்ள சமுதாய நலக் கூடத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது. பொன்னேரி துணை வட்டாட்சியா் சிவக்குமாா் தலைமை வகித்தாா்.
மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம் கலந்துகொண்டு, முகாமை தொடங்கிவைத்து பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் மீ.வே.கா்ணாகரன், முன்னாள் ஊராட்சித் தலைவா் வேதா, வட்டார வளா்ச்சி அலுவலா் காளியம்மாள், மின்வாரிய உதவி செயற்பொறியாளா் விஜயகுமாா், உதவிப் பொறியாளா் வினோத்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.