முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணிகள்; கேரள அரசு, மத்திய அரசுக்கு உச்ச நீதிம...
பிலிப்பின்ஸ் அதிபர் ஆக.4-ல் இந்தியா வருகை!
பிலிப்பின்ஸ் நாட்டின் அதிபர் ஃபெர்டினாண்டு ஆர். மார்கோஸ் ஜூனியர், வரும் ஆகஸ்ட் 4 முதல் 8 ஆம் தேதி வரை அரசு முறைப் பயணமாக இந்தியா வருவதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிலிப்பின்ஸ் அதிபர் மார்கோஸ் ஜூனியர், வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி அரசு முறைப் பயணமாக இந்தியா வருகிறார். அப்போது, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்கும் அவர், பிரதமர் நரேந்திர மோடியுடன் இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பின்ஸ் நாட்டின் அதிபராகப் பதவியேற்ற பின் முதல்முறையாக பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அதிபர் மார்கோஸ் ஜூனியர் இந்தியா வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பயணத்தில், அதிபர் மார்கோஸுடன் அவரது மனைவி மேடமே லூயிஸ் அரனேட்டா மார்கோஸ், முக்கிய அமைச்சர்கள் உள்ளிட்ட உயர்நிலைக் குழுவும் இந்தியா வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கும், அவர் இருநாடுகளுக்கு இடையிலான பன்முகத் துறைகளின் ஒத்துழைப்புகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னர், ஆகஸ்ட் 8 ஆம் தேதி தாயகம் திரும்பும் முன்னர் பெங்களூருக்கு அவர் செல்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: அந்தமான் நிகோபார் தீவில் முதன்முறையாக அமலாக்கத் துறை சோதனை! முன்னாள் எம்.பி.யின் மோசடி அம்பலம்?