ரூ.19 லட்சத்தில் கால்வாய், சாலைப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்
8 ஆம் வகுப்பு மாணவியைத் திருமணம் செய்த 40 வயது பள்ளி ஆசிரியர்- தெலங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்!
40 வயதுடைய பள்ளி ஆசிரியர் ஒருவர், 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியைத் திருமணம் செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவில் குழந்தைத் திருமணம் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள நந்திகாமாவில், 40 வயது பள்ளி ஆசிரியர் ஒருவர், 8 ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவியைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்.

இந்தத் திருமணம் குறித்த புகைப்படம் சமூக வலைததளங்களில் வைரலானதைத் தொடர்ந்துதான் இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து திருமணம் செய்துகொண்ட ஆசிரியர் மற்றும் திருமணத்தை நடத்தி வைத்த பூசாரி உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
குழந்தை திருமணத் தடைச் சட்டம், 2006, பெண்களுக்கு 18 வயதும், ஆண்களுக்கு 21 வயதும் திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயது என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது. இருப்பினும், இதுபோன்ற சம்பவங்கள் நட்பபது அதிர்ச்சியையும் வேதனையையும் உண்டாக்குகிறது.