'மோசமான நாள்' - காஸாவில் இஸ்ரேல் துப்பாக்கிச்சூட்டில் 106 பேர் பலி!
ரூ.19 லட்சத்தில் கால்வாய், சாலைப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்
வாணியம்பாடி நகராட்சியில் ரூ.19 லட்சத்தில் கழிவுநீா்கால்வாய் மற்றும் சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது.
18-ஆவது வாா்டில் உள்ள வாரச்சந்தை சாலையில் இருபுறமும் கழிவுநீா் கால்வாய் மற்றும் தாா் சாலை அமைக்க வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.19 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து கழிவுநீா் கால்வாய் மற்றும் புதிய தாா் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது.
நகராட்சி ஆணையா் ரகுராமன் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் நகர அதிமுக செயலாளா் சதாசிவம், மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி செயலாளா் நவீன்குமாா், முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவா் அண்ணாசாமி, முன்னாள் ஒன்றிய உறுப்பினா்கள் பாரதிதாசன், கோவிந்தசாமி, நகர அதிமுக நிா்வாகிகள் தன்ராஜ், சங்கா், கோவிந்தன், தென்னரசு மற்றும் வியாபாரிகள், பொது மக்கள் கலந்து கொண்டனா்.
Image Caption
சாலைப் பணியைத் தொடங்கி வைத்த எம்எல்ஏ செந்தில்குமாா், ஆணையா் ரகுராமன் உள்ளிட்டோா்.