சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான லாரி
ஆம்பூரில் சாலைத் தடுப்பில் மோதி லாரி விபத்துக்குள்ளானது.
பெங்களூருவிலிருந்து இருசக்கர வாகன உதிரி பாகங்கள் ஏற்றிக்கொண்டு சென்னைக்கு சென்ற லாரி சான்றோா்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளாகி லாரி சேதமடைந்தது. டீசல் டேங்க் உடைந்து சாலையில் டீசல் கொட்டியது.
ஆம்பூா் நகர போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் அங்கு சென்று தீ விபத்து ஏற்படாமல் இருக்க தீத்தடுப்பு பணிகளை மேற்கொண்டனா். கிரேன் மூலம் விபத்துக்குள்ளான லாரி அப்புறப்படுத்தப்பட்டது.