செய்திகள் :

ஆடுஜீவிதம் எதனால் தேசிய விருது பெறவில்லை? ரசிகர்கள் ஆதங்கம்!

post image

ஆடுஜீவிதம் திரைப்படம் எதனால் தேசிய விருது பெறவில்லை தேர்வுக்குழுமை சினிமா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடுஜீவிதம் நாவல் (தி கோட் லைஃப்) அதே பெயரில் திரைபடமாக எடுக்கப்பட்டது. இந்தப் படத்தில் நாயகனாக பிருத்விராஜும், நாயகியாக அமலா பாலும் நடித்துள்ளனர்.

பிளெஸ்ஸி ஐப் தாமஸ் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார். கே.எஸ்.சுனில் ஒளிப்பதிவு செய்ய படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக இப்படத்தின் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், 2024, மார்ச் 28 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது.

71-ஆவது தேசிய விருது நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

உலக அளவில் கவனம் ஈர்க்கப்பட்ட ஆடுஜீவிதம் படத்துக்கு ஏன் தேசிய விருது வழங்கவில்லை என சினிமா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

காரணம் என்ன?

இந்தப் படம் 2023, டிச.31ஆம் தேதி தணிக்கைச் செய்யப்பட்டது. அதன்படி தேசிய விருதுக்கு தகுதியானதுதான். இருப்பினும் இந்தப் படம் 2024-இல் வெளியாகியதால் 72-ஆவது தேசிய விருதுக்கு போட்டியிடவும் வாய்ப்பிருக்கிறது.

இது குறித்து படக்குழு எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இருப்பினும ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளார்கள்.

Cinema fans are questioning the selection committee on social media as to why the film Aadujeevitham did not win the National Award.

இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும் தென்கொரிய வீரர்!

டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பா் அணியின் கேப்டன் சன் ஹியொங்-மின்இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தென்கொரியாவைச் சேர்ந்த சன் (33 வயது) தன்னுடைய 23ஆவது வயதில் வடக்கு லண்டனுக்கு குடிப... மேலும் பார்க்க

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான கூலி திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளதால் ரசிகர்க... மேலும் பார்க்க

கூலி இசை வெளியீட்டு விழாவில் ஆமிர் கான்!

கூலி இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஆமிர் கான் கலந்துகொள்கிறார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரைக்கு வருகி... மேலும் பார்க்க

தடக் 2: அமோக வரவேற்பில் ஹிந்தி பரியேறும் பெருமாள்!

ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வெளியான பரியேறும் பெருமாள் (தடக் 2) ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழில் மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் ஹிந்தியில் தடக் 2 படமாக நேற்று (ஆ... மேலும் பார்க்க

ஆகஸ்ட் மாத எண்கணிதப் பலன்கள்!

தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஆகஸ்ட் மாத எண்கணிதப் பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:எதையும் ஆழமாக ... மேலும் பார்க்க

இதற்குமேல் என்ன கேட்பது..!? தேசிய விருது குறித்து அட்லீ!

ஜவான் படத்துக்காக தேசிய விருது பெற்ற ஷாருக் கான் குறித்து இயக்குநர் அட்லீ நீண்டதாக காதல் கடிதம் போல நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். சிறந்த நடிகருக்கான விருதை ஷாருக் கான் முதல்முதலாக ஜவான் படத்தின்மூல... மேலும் பார்க்க