செய்திகள் :

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

post image

நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான கூலி திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

இதற்காக, இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் இசை வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகளும் தீவிரமடைந்துள்ளன.

அதேநேரம், கூலி திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்ததால் சமூக வலைதளங்களில் அதனை வரவேற்றும் எதிர்த்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்துக்கு குழந்தை ரசிகர்களும் உள்ளதால் அவர்களால் படம் பார்க்க முடியவில்லை என்றால் பெரிய வணிக வெற்றி சாத்தியமில்லை என ரசிகர்கள் அதிருப்தியைப் பதிவு செய்துள்ளனர். இன்னொரு பக்கம், லோகேஷ் கனகராஜின் முதல் ஏ சான்றிதழ் படம் கண்டிப்பாக ஆக்சன் காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் இதை வரவேற்கிறோம் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.

ரஜினிகாந்த்தின் 50 ஆண்டுகால திரையுலக பயணத்தில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு ’ஏ’ சான்றிதழ் பெற்ற படமாக கூலி உருவாகியுள்ளது. இறுதியாக, கடந்த 1989 ஆம் ஆண்டு வெளியான சிவா திரைப்படம் ரஜினியின் ’ஏ’ சான்றிதழ் பெற்றிருந்தது.

இப்படங்களைத் தவிர்த்து, ரஜினி நடித்த மூன்று முடிச்சு (1976), தப்புத்தாளங்கள் (1978), காளி (1980), நெற்றிக்கண் (1981), சிவப்பு சூரியன் (1983), நான் மகான் அல்ல (1984), நான் சிவப்பு மனிதன் (1985), ஊர்க்காவலன் (1987) ஆகிய படங்களும் ஏ சான்றிதழ் பெற்ற திரைப்படங்கள்தான். இதில், சில படங்கள் பெரிய வெற்றியையும் பதிவு செய்துள்ளன.

இதையும் படிக்க: கூலி இசை வெளியீட்டு விழாவில் ஆமிர் கான்!

actor rajinikanth's A certificate movies over 50 years of his cinema carreer

தேவா யாருன்னு தெரிஞ்சும் விளையாடறானுங்க... கூலி டிரைலர்!

நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படத்தின் டிரைலர் வெளியானது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர்கள் ரஜினிகாந்த், ஆமிர் கான், நாகர்ஜூனா, உபேந்திரா, ஷ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான கூலி திரைப்... மேலும் பார்க்க

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

நடிகர் கமல் ஹாசன் இன்ஸ்டாகிராமில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். விக்ரம் வெற்றிக்குப் பின் நடிகர் கமல் ஹாசனுக்கு வணிக ரீதியாக மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. கல்கி ஏடி திரைப்படத்தில் வில்லனாக நடிக்க ரூ. 1... மேலும் பார்க்க

இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும் தென்கொரிய வீரர்!

டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பா் அணியின் கேப்டன் சன் ஹியொங்-மின்இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தென்கொரியாவைச் சேர்ந்த சன் (33 வயது) தன்னுடைய 23ஆவது வயதில் வடக்கு லண்டனுக்கு குடிப... மேலும் பார்க்க

கூலி இசை வெளியீட்டு விழாவில் ஆமிர் கான்!

கூலி இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஆமிர் கான் கலந்துகொள்கிறார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரைக்கு வருகி... மேலும் பார்க்க

தடக் 2: அமோக வரவேற்பில் ஹிந்தி பரியேறும் பெருமாள்!

ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வெளியான பரியேறும் பெருமாள் (தடக் 2) ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழில் மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் ஹிந்தியில் தடக் 2 படமாக நேற்று (ஆ... மேலும் பார்க்க