'நயினாருக்கு எதிராக ஓபிஎஸ்' டு Coolie இசை வெளியீட்டு விழா; 02.08.2025 முக்கிய செ...
கூலி இசை வெளியீட்டு விழாவில் ஆமிர் கான்!
கூலி இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஆமிர் கான் கலந்துகொள்கிறார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
தணிக்கை வாரியம் கூலி படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. ரஜினிகாந்த்தின் 50 ஆண்டுகால திரையுலக பயணத்தில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு ’ஏ’ சான்றிதழ் பெற்ற படமாக கூலி உருவாகியுள்ளது. இறுதியாக, கடந்த 1989 ஆம் ஆண்டு வெளியான சிவா திரைப்படம் ரஜினியின் ’ஏ’ சான்றிதழ் பெற்றப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
இதற்காக, இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் இசை வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகளும் தீவிரமடைந்துள்ளது.
The stars are aligned!✨ Get Ready for #CoolieUnleashed Today!@rajinikanth@Dir_Lokesh@anirudhofficial#AamirKhan@iamnagarjuna@nimmaupendra#SathyaRaj#SoubinShahir@shrutihaasan#CoolieFromAug14pic.twitter.com/4wQior0GaA
— Sun Pictures (@sunpictures) August 2, 2025
இந்த நிலையில், இந்நிகழ்வில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஆமிர் கான், நாகர்ஜூனா, உப்பேந்திரா, சௌபின் சாகிர், ஷ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளதை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. தான் நடித்த தமிழ் சினிமாவின் இசை வெளியீட்டுக்கு முதல் முறையாக ஆமீர் கான் கலந்துகொள்ள உள்ளது எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.
இதையும் படிக்க: தடக் 2: அமோக வரவேற்பில் ஹிந்தி பரியேறும் பெருமாள்!