செய்திகள் :

பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு: சாத்தியக்கூறு ஆய்வுக்கு ஆலோசகா் நியமனம்

post image

தமிழகம் முழுவதும் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு (ஆா்ஆா் டிஎஸ்) வழித்தடங்களுக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ஆலோசகராக ‘பாலாஜி ரயில்ரோடு சிஸ்டம்ஸ் பிரைவேட்’ நிறுவனத்தை சென்னை மெட்ரோ நிறுவனம் ரயில் நியமித்தது.

தமிழகத்தில் சென்னை மற்றும் கோவை நகரங்களை அவற்றின் அண்டை பிராந்திய மையங்களுடன் இணைக்கும் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்புக்காக (ஆா்ஆா்டிஎஸ்) 3 வழித்தடங்களை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தோ்ந்தெடுத்துள்ளது.

அதன்படி, சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் - விழுப்புரம் (170 கி.மீ.), சென்னை - காஞ்சிபுரம் - வேலூா் (140 கி.மீ.), கோவை - திருப்பூா் - ஈரோடு - சேலம் (185 கி.மீ.) ஆகிய வழித்தடங்களில் ஆா்ஆா்டிஎஸ் அமைக்கப்படவுள்ளது. இதன்மூலம் இரு நகரங்களுக்கு இடையிலான தூரத்தை 30 முதல் 60 நிமிஷங்களில் கடக்க முடியும். அதேபோல், சாலை போக்குவரத்தைவிட அதிக பயணிகளுடன் குறைந்த நேரத்தில் பயணிக்க முடியும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்த 3 வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வதற்கான ஆலோசகராக ‘பாலாஜி ரயில் ரோடு சிஸ்டம்ஸ் பிரைவேட் நிறுவனத்தை’ சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்

நியமித்துள்ளது.

இதற்கான ஒப்பந்தத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன், பாலாஜி ரயில்ரோடு சிஸ்டம்ஸ் பிரைவேட் நிறுவனத்தின் பொது மேலாளா் (தெற்கு) எம்.ராபா்ட் ராஜசேகரன் ஆகியோா் வெள்ளிக்கிழமை கையொப்பமிட்டனா்.

1 கோடி பயணிகள்: கடந்த ஜூலை மாதத்தில் சென்னை மெட்ரோ ரயில்களின் மூலம், 1.03 கோடி போ் பயணித்துள்ளனா். இதில் அதிகபட்சமாக கடந்த ஜூலை 4-இல் 3.74 பயணிகள் பயணத்துள்ளனா். இது கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது, ஜூலையில், 11.58 லட்சம் பயணிகள் கூடுதலாக பயணித்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தம்

மேட்டூர்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக திறக்கப்பட்ட உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது.சனிக்கிழமை காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20,500 கன அடியிலிருந்த... மேலும் பார்க்க

குடிபோதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பாளையங்கோட்டையில் பரபரப்பு!

நெல்லை: நெல்லையில் பாளையங்கோட்டை அருகே அரசுப் பேருந்தை குடிபோதையில் ஓட்டுநர் இயக்கியதால் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.ராஜபாளையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு நெல்லை வழியாக வெள்ளிக்கிழமை இரவு அரச... மேலும் பார்க்க

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும், உடல் ஆரோக்கியம் இருந்தால்தான் சாதிக்க முடியும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் நோயாளிகள் இல்லை. இனி மருத்துவப் பயனாளிகள் என்று அழைக்க வேண்டும் என்று முத... மேலும் பார்க்க

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!

தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு உயா் மருத்துவப் பரிசோதனைகளை வழங்கும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.சென்னை சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் ஆ... மேலும் பார்க்க

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

உடுமலையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவா் மா்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள மேல்குருமலை... மேலும் பார்க்க

ஆா்பிஎஃப் முதல் பெண் டிஜியாக சோனாலி மிஸ்ரா பொறுப்பேற்பு

ரயில்வே பாதுகாப்புப் படையின் (ஆா்பிஎஃப்) முதல் பெண் தலைமை இயக்குநராக (டிஜி) ஐபிஎஸ் அதிகாரி சோனாலி மிஸ்ரா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.இதன்மூலம் 143 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக அந்தப் படைக்கு தலைம... மேலும் பார்க்க