செய்திகள் :

உங்கள் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றி தருவாள் சேலம் சௌடேஸ்வரி அம்மன்; விளக்கு பூஜை; பதிவு இலவசம்!

post image

2025 ஆகஸ்ட் 22-ம் தேதி சேலம் குகை ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் மாலை 6 மணி அளவில் திருவிளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்துகொண்டு அருள்பெறலாம். அதுகுறித்த விவரங்கள் உங்களுக்காக...

முன்பதிவுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

விளக்கு பூஜை

சேலம் மாநகரின் குகை பகுதியில் காளியம்மன் தெருவில் (சந்திரா பனியன் அருகில்) பல 100 ஆண்டுகளைக் கடந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் ஆலயம் உள்ளது. சேலத்தின் காவல் தெய்வமாக இன்று வரை ஆட்சி செய்து வருகிறாள். சக்தி, சாமுண்டா, ஜோதி ஆகிய முப்பெரும் தேவியரின் இணைந்த வடிவமாக சௌடேஸ்வரி அம்மன் வணங்கப்படுகிறாள். மிகவும் துடியான தெய்வமான இவளை வணங்கி நீதி கேட்டால் நிச்சயம் நியாயம் வழங்குவாள் என்கிறார்கள் இவள் பக்தர்கள். இங்கு வந்து நோய், கடன், வழக்கு, காரியத்தடைகள் நீக்கியவர் அநேகம்.

புராண காலத்தில் இங்குள்ள மக்களை வஜ்ர முஷ்டி, தூம் ராட்சன், தூம்ர வக்கிரன், பஞ்சசேனன், சித்ரேசனன் எனும் அசுரர்கள் தாக்கிக் கொடுமை செய்தனர். தேவலர் மக்கள் மிக வீரத்துடன் போரிட்டும் அவர்களால் அசுரர்களை வெல்ல முடியவில்லை. அப்போது ஆதி பராசக்தியின் வடிவமான சௌடேஸ்வரி அம்மன் அங்கு தோன்றி அந்த அசுரர்களை கொன்றாள் என்கிறது புராணம். அன்றிலிருந்து அசுரர்களை எதிர்த்துப் போரிட்ட மக்கள், வீரகுமாரர்கள் என்று தேவியின் பிள்ளைகளாக மாறினர். அவர்கள் வம்சாவழி குலத்தினரே இந்த அம்மனின் ஆலயத்தை நிர்வகிப்பதும் கத்தி போடுதல் எனும் சம்பிரதாயத்தை செய்பவர்களாகவும் இருந்து வருகின்றனர்.

விளக்கு பூஜை

வேண்டியவரின் குறைகளை எல்லாம் தீர்த்து வைப்பவள் இந்த சௌடேஸ்வரி அம்மன். அதுவும் இவளை வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி வழிபட்டால் வேண்டியது எல்லாம் நிறைவேறும் என்பது ஐதிகம். எனவே 2025 ஆகஸ்ட் 22-ம் தேதி சேலம் குகை ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் மாலை 6 மணி அளவில் விளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. சக்தி விகடனும் ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் தேவாங்க குல சமூக நல டிரஸ்ட் மற்றும் ஸ்ரீமாரியம்மன் ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் வீரக்குமாரர்கள் குழுவும் இணைந்து இந்த திருவிளக்கு பூஜையை நடத்த உள்ளது. இதில் நீங்களும் கலந்துகொண்டு அருள்பெறலாம்.

முன்பதிவுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

பல்வேறு சிறப்புகளை உடைய இந்தத் தலத்தில் பெண்கள் திருவிளக்கேற்றி வழிபாடு செய்கிறபோது சகல நன்மைகளும் உண்டாகும். 'கடன்கள் தீரும்' 'திருமண வேண்டுதல்கள் பலிக்கும்; சௌடேஸ்வரி அம்மனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்' என்கிறார்கள் பக்தர்கள்.

உலக நன்மைக்காகவும் தனிப்பட்ட துயர் நீங்கவும் பிரார்த்தனை செய்ய உகந்த வழிபாடு திருவிளக்கு வழிபாடு. அந்த அற்புதமான வழிபாட்டில் கலந்துகொள்ள வாசகிகளான உங்களையும் அழைக்கிறோம்.

விளக்கு பூஜை

கலந்துகொள்ளும் வாசகியர் கவனத்துக்கு:

விளக்குப் பூஜையில் கலந்துகொள்ளும் வாசகியர், விளக்கு, விளக்கை வைப்பதற்கான தட்டு, மணி, பஞ்சபாத்திரம், உத்தரணி, கற்பூர ஆரத்தித் தட்டு ஆகியவற்றை எடுத்து வந்தால் போதுமானது. மற்றபடி பூஜைக்குத் தேவையான திரி, எண்ணெய், தாம்பூலப் பொருள்கள், நைவேத்தியம் முதலானவற்றை நாங்களே வழங்குகிறோம்.

அற்புதமான இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் வாசகியர் இங்கு தரப்பட்டுள்ள link-ஐ பயன்படுத்தி உரிய விவரங்களைப் பூர்த்தி செய்து முன்பதிவு செய்யலாம் அல்லது கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு, உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் விவரங்களுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள எவ்வித கட்டணமும் கிடையாது.

முன்பதிவுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

பிரம்மஹத்தி பரிகார ஹோமம்: உங்களின் எல்லா கஷ்டங்களுக்கும் இதுதான் காரணமா? சங்கல்பித்தால் தீர்வுவரும்!

பிரம்மஹத்தி பரிகார ஹோமம்: உங்களின் எல்லா கஷ்டங்களுக்கும் இதுதான் காரணமா! சங்கல்பித்தால் தீர்வுவரும்! 2025 ஆகஸ்ட் 17-ம் நாள் திப்பிராஜபுரம் ஸ்ரீவைகுந்த காளத்தியப்பர் கோயிலில் பிரம்மஹத்தி பரிகார ஹோமம் ந... மேலும் பார்க்க

சதுரகிரியில் ஆடி அமாவாசை; ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் மலையேறி சாமி தரிசனம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தில் மதுரை மாவட்ட சாப்டூர் வனச்சரக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிக்குள் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். இ... மேலும் பார்க்க

``குன்றாண்டார் கோயில் பராமரிப்புக்கு ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கீடு!'' - துரை வைகோ எம்.பி சொல்வதென்ன?

புதுக்கோட்டை மாவட்டத்தில், கடந்த 25 வருடங்களாக பராமரிப்பில்லாமல் இருக்கும் குன்றாண்டார் கோயிலை புனரமைக்க ரூ. 12 லட்சம் வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, திருச்சி எம்.பி துரை வைகோ தெரிவித்துள்ளார்.இதுகுறித... மேலும் பார்க்க

சதுரகிரி ஆடி அமாவாசை விழா: பிரதோஷத்திற்குக் குவிந்த பக்தர்கள்; வனத்துறையின் கட்டுப்பாடுகள் என்னென்ன?

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்.இந்தக் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசை திருவிழா வெகு விம... மேலும் பார்க்க

பிரம்மஹத்தி பரிகார ஹோமம்: கடன்; நஷ்டம்; தோல்வி; தடை என அனைத்தையும் நீக்கி வெற்றி தரும் வழிபாடு

2025 ஆகஸ்ட் 17-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை கும்பகோணம் திப்பிராஜபுரம் ஸ்ரீவைகுந்த காளத்தியப்பர் கோயிலில் பிரம்மஹத்தி பரிகார ஹோமம் நடைபெற உள்ளது. கடன்; நஷ்டம்; தோல்வி; சூழ்ச்சி; தடை என அனைத்தையும் நீக்கி வெ... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: 50 ஆண்டுகளுக்குப் பிறகு சீரமைக்கப்பட்ட வள்ளி குகை; மகிழ்ச்சியில் பக்தர்கள்!

தமிழ் கடவுள் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேச நாட்களில் ஆயிரக்கணக்கான ... மேலும் பார்க்க