Jagdeep Dhankar ராஜினாமா: பகீர் பின்னணி! | OTP சர்ச்சை: சிக்கலில் DMK | Imperfec...
பிரம்மஹத்தி பரிகார ஹோமம்: கடன்; நஷ்டம்; தோல்வி; தடை என அனைத்தையும் நீக்கி வெற்றி தரும் வழிபாடு
2025 ஆகஸ்ட் 17-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை கும்பகோணம் திப்பிராஜபுரம் ஸ்ரீவைகுந்த காளத்தியப்பர் கோயிலில் பிரம்மஹத்தி பரிகார ஹோமம் நடைபெற உள்ளது. கடன்; நஷ்டம்; தோல்வி; சூழ்ச்சி; தடை என அனைத்தையும் நீக்கி வெற்றி தரும் பரிகார ஹோமம் இது.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் வலங்கைமானுக்கு அருகே அமைந்திருக்கிறது திப்பிராஜபுரம். தஞ்சையை ஆண்ட விஜயநகர மன்னர்களின் ஆட்சியில் அமைச்சராக இருந்த திப்பையா இந்த ஊரைத் தானமாகக் கொடுத்ததால் இக்கிராமம் அவர் பெயரிலேயே திப்பையாராஜபுரம் என்றாகி அதுவே மருவி திப்பிராஜபுரம் என்றானது. திருமலைராஜன், முடிகொண்டான் ஆறுகள் இணையும் இந்த அழகிய ஊரில் பூதேவி, நீளா சமேத வரதராஜ பெருமாள் கோயிலும் ஸ்ரீஅபிராமி அம்பிகை சமேத விக்ரம சோளேஸ்வரர் கோயிலும் அமைந்துள்ளது. இதில் சோளேஸ்வரர் கோயில் விக்ரம சோழனால் அமைக்கப்பட்டது என தலவரலாறு கூறுகிறது. அதுவும் விக்ரம சோழனின் பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபட இந்த ஆலயம் உருவானது என்றும் கூறப்படுகிறது. சதுர் வேத பண்டிதர்களும் மாபெரும் ஞானியரும் வாழ்ந்த புண்ணிய பூமியிது என்று தமிழக வரலாறும் கூறுகிறது.

இதே திப்பிராஜபுரத்தில் பக்தர்களின் வேதனைகளைத் தீர்க்கும் கலியுக வரதராக எழுந்தருளி இருக்கிறார் ஸ்ரீவைகுந்த காளத்தியப்பர். திருமாலின் அம்சத்தையும் தாங்கியுள்ள அபூர்வ சிவவடிவமே ஸ்ரீவைகுந்த காளத்தியப்பர் என்று இங்கே போற்றப்படுகிறார். சிவ வழிபாடு மிக மிகத் தொன்மையானது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் 3000 ஆண்டுகள் பழைமையான மூலவர் இவர் என்கிறார்கள் பெரியோர்கள். சுந்தரகுஜாம்பிகை, கோவலர்வல்லி என இரு அம்பிகைகளோடு சுவாமி எழுந்தருளி அருள்பாலிக்கிறார். முக்குறுணி விநாயகரும் ஸ்ரீதண்டாயுதபாணியும் இங்கே அருள்கிறார்கள்.
இந்த ஆலயத்தின் நிர்வாகத்தைக் கவனித்து வரும் ஞானக்குழந்தை சிவகன்று ஸ்ரீகருணா அமுத சுவாமி அவர்கள் கருவிலேயே திரு படைத்த தவச்செல்வர். திருஞான சம்பந்தரைப் போல சிறுகுழந்தை முதலே பாடல்கள் புனையும் திருவருள் வாய்க்கப்பட்டவர். இவரின் அசாத்திய ஞானத்தைக் கண்ட குருதேவ் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் உள்ளிட்ட ஆன்மிகப் பெரியோர்கள் பலரும் இவரை ஆசிர்வதித்து பெருமை கொள்ளச் செய்திருக்கிறார்கள். இதுவரை 10,000 ஆன்மிகப் பாடல்களை இயற்றியுள்ள இந்த பால மகானின் மேற்பார்வையில் இந்த ஆலயத்தில் அன்பர்களின் குறைகளைத் தீர்க்கும் பிரம்மஹத்தி ஹோமம் நடைபெற உள்ளது. 2025 ஆகஸ்ட் 17-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை கும்பகோணம் திப்பிராஜபுரம் ஸ்ரீவைகுந்த காளத்தியப்பர் கோயிலில் பிரம்மஹத்தி பரிகார ஹோமம் நடைபெற உள்ளது.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
அது என்ன பிரம்மஹத்தி ஹோமம்?
பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயரிய பரிகாரமாக விளங்குவது இந்த ஹோமம். வாழ்வில் தொடர்ந்து தோல்வியும் அவமானமும் அடைபவர்கள் கட்டாயம் செய்ய வேண்டிய பரிகார ஹோமம் இது. கடன்; நஷ்டம்; தோல்வி; சூழ்ச்சி; தடை என அனைத்தையும் நீக்கி வெற்றி தரும் பரிகார ஹோமம் இது. திறமை இருந்தும் நல்ல நிலையை அடைய முடியாமல் தவிக்கும் அனைவருக்குமான உயரிய பரிகார ஹோமம் ஸ்ரீபிரம்மஹத்தி ஹோமம். இதில் கலந்து கொண்டால் நிச்சயம் நீங்கள் உங்கள் வாழ்வில் மேன்மையும் வெற்றியும் பெறுவீர்கள் என்பது நிச்சயம்.
முன் ஜன்மத்தில் கொலை செய்தவர்கள், ஒருவரின் முன்னோர்கள் செய்த பாவங்கள், தாய்-தந்தையைப் பராமரிக்காமல் விட்டவர்கள், குருவை அவமதித்தவர், உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தவர், தெய்வச் சொத்தைத் திருடியவர், பெண் பாவம் செய்தவர், அறியாமல் செய்துவிடும் பாவத்தால் பெரும் பாதிப்புகளை உருவாக்கியவர்களை இந்த பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கும் என்பது நம்பிக்கை. பிரம்மஹத்தி தோஷம் பிடித்த வரகுண பாண்டியன், திருவிடை மருதூருக்குச் சென்று பரிகார பூஜைகள் செய்து விடுபட்டான் என அவ்வூர் தலபுராணம் கூறும். அதேபோல சோழன் விக்ரமனும் இந்த ஊரில் வந்து பிரம்மஹத்தி தோஷம் நீங்கினான் என்பதும் வரலாறு.
பிரம்மஹத்தி தோஷம் பாதிப்பு கொண்டவர்களின் வாழ்க்கை நிம்மதியாகவே இருக்காது என்பது ஜோதிடம் கூறும் தகவல். வேலை கிடைக்காது. தொழிலில் தோல்வி, வியாபாரத்தில் நஷ்டம், கூடி வரும் திருமணம் தள்ளிப் போகும். எல்லா பணிகளும் பாதியில் நிற்கும். அடிக்கடி ஏமாந்து பணத்தை இழப்பார்கள். சொந்தங்களால் ஏமாற்றப்படுவார்கள். இப்படி பல ஆண்டுகள் பரிதவித்து நிற்பவர்களுக்கு நிச்சயம் இந்த பிரம்மஹத்தி தோஷம் பலன் அளிக்கும். அதுவும் திப்பிராஜபுரம் என்னும் இந்த திருத்தலத்தில் ஸ்ரீவைகுந்த காளத்தியப்பர் ஆலயத்தில் இந்த பரிகார ஹோமத்தில் சங்கல்பித்துக் கொண்டால் உங்களின் எல்லா பிரச்னைகளும் நீங்கி வாழ்வில் நலமும் வளமும் பெறுவீர்கள் என்பது உறுதி.

ஆன்மிகப் பெரியோர்களின் வழிகாட்டலில் மிகுந்த சிரத்தையோடு நடத்தப்படும் இந்த பிரம்மஹத்தி தோஷ பரிகார ஹோமத்தில் சங்கல்பித்துக் கொண்டால் வாழ்வில் நலமும் வளமும் பெறுவீர்.
குறிப்பு: உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07

வாசகர்களின் கவனத்துக்கு!
இந்த ஹோம வழிபாட்டில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்குப் பிரசாதமாக ஹோம பஸ்பம், ரட்சை மற்றும் குங்குமம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும். வாசகர்கள், இந்த வழிபாட்டு வைபவங்களை சக்தி விகடன் முகநூல் பக்கத்தில் வீடியோ வடிவில் தரிசிக்கலாம். https://www.facebook.com/SakthiVikatan
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07