‘ஓரணியில் தமிழ்நாடு’ ஓடிபி விவகாரம்: உயா்நீதிமன்றத்தில் திமுக முறையீடு
தரையிறங்கிய உடனே தீப்பற்றி எரிந்த ஏர் இந்தியா விமானம்: பயணிகள் பத்திரமாக மீட்பு!
புது தில்லி: தரையிறங்கிய உடனே ஏர் இந்தியா விமானம் தீப்பற்றி எரிந்ததால் தில்லி சர்வதேச விமான நிலையத்தில் பதற்றமான சூழல் நிலவியது.
ஏர் இந்தியாவின் ஏஐ 315 விமானம் ஹாங் காங்கிலிருந்து புறப்பட்டு தில்லியில் இன்று(ஜூலை 22) வந்திறங்கியது. இந்தநிலையில், பயணிகள் ஒவ்வொருவராக விமானத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தபோது திடீரென விமானத்தின் வால் பகுதியில் தீப்பற்றியது.
எனினும், விமானத்தில் இருந்த பணியாளர்கள், பயணிகள் உள்பட அனைவரும் பத்திரமாக வெளியேறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தரையிறங்கிய சில நிமிடங்களில் விமானத்தின் வால் பகுதியில் தீப்பற்றியதால் தில்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
விமானத்தில் தீப்பற்ற என்ன காரணம் என்பதை கண்டறிய விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.