சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் ரவீனா தாஹா.. அப்போ ரெட்கார்டு?
டிஜிட்டல் அரெஸ்ட் எனக் கூறி ரூ.75 லட்சம் மோசடி: வங்கிக் கணக்கை விற்ற இளைஞர் கைது
அம்பத்தூரில் ஓய்வுப் பெற்ற வங்கி ஊழியரிடம் டிஜிட்டல் அரெஸ்ட் என கூறி ரூ.75 லட்சம் பணத்தை பறித்த வழக்கில் கார் ஓட்டுநரை இணைய வழிக் குற்றப்பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
அம்பத்தூர் ராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவர் ஓய்வுப் பெற்ற வங்கி ஊழியர். இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரவியை தொடர்பு கொண்டு மும்பையில் இருந்து சிபிஐ அதிகாரி பேசுவதாக கூறியுள்ளனர். அவர்கள் பிரபுவிடம் போதைப் பொருள் கடத்தலுக்கு உங்களுடைய ஆதார் முறைகேடாக பயன்படுத்தி இருப்பதாக கூறியுள்ளனர்.
மேலும், இது தொடர்பாக உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்வதாக மிரட்டியுள்ளனர். இதனை நாங்கள் செய்யாமல் இருக்க நாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்புமாறு கூறியுள்ளனர்.
இதையடுத்து இவர் கொஞ்சம், கொஞ்சமாக 10 மேற்பட்ட பரிவர்த்தனைகளில் ரூ.75 லட்சம் பணத்தை அனுப்பியுள்ளார். இதன் பிறகு அவர் ஏமாற்றப்பட்டது அறிந்து ஆவடி காவல் ஆணையரகத்தில் கடந்த ஜனவரி மாதம் புகார் அளித்துள்ளார். காவல் ஆய்வாளர் சுதாகர் தலைமையில் போலீஸார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் அஜ்னாஸ் (27) என்பவரது வங்கிக் கணக்கில் இருந்து ரவியின் குறிப்பிட்ட தொகை மோசடி பேர்வழிகளுக்கு சென்று இருப்பதும், இவர் தனது வங்கிக் கணக்கை ரூ.10,000 பணத்தை பெற்றுக் கொண்டு விற்பனை செய்ததும், இவரது வங்கி கணக்கிலிருந்து பல மோசடி நபர்களுக்கு பணம் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் கேரளா மாநிலம் சென்று அஜ்னாஜை (படம்) கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.