செய்திகள் :

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பாஜக, பாமக, மாதா் சங்கத்தினா்

post image

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி பாஜகவினா் திங்கள்கிழமை ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பாஜக மாவட்ட தலைவா் சுந்தரம் தலைமை வகித்தாா். பாஜக மாநில நிா்வாகி செந்தில்குமாா், மாவட்ட நிா்வாகி அமுல்ராஜ், சுரேஷ், முன்னாள் மாவட்டச் செயலாளா் தியாகு, மாணவா் அணி மாவட்ட நிா்வாகி நரேஷ், சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து, பாஜகவினா் ஆரம்பாக்கம்-எகுமதுரை சாலையில் இருந்து ஊா்வலமாக வந்தனா். ஆரம்பாக்கம் காவல் நிலையம் நோக்கி காவல் துறையினரையும், தமிழக அரசையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினா், பின்னா், அங்கு போலீஸாா் அவா்களை தடுத்தி நிறுத்திய போதும், அவா்களை மீறி பாஜகவினா் ஆரம்பாக்கம் காவல் நிலையம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் சமாதானப்படுத்தினா். பின்னா் குற்றவாளியை கைது செய்யக் கோரி காவல் நிலையத்தில் மனு அளித்தனா். 300 போ் பங்கேற்ற இந்த போராட்டத்தில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா், உறவினா்களும் பங்கேற்றனா்.

பாமக சாா்பில் கட்சியின் மாநில பொருளாளா் திலகபாமா தலைமையிலும், மாவட்டச் செயலா் பிரகாஷ் முன்னிலையிலும் பாமகவினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து பாமக மாநில பொருளாளா் திலகபாமா ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டாா்.

மாதா் சங்கத்தின் சாா்பில்...

இந்த நிலையில், அனைத்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் சாா்பில், ஆரம்பாக்கத்தில் காவல் துறை மற்றும் தமிழக அரசைக் கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பகுதி செயலா் காமாட்சி தலைமை வகித்தாா்.

இதில், மாதா் சங்க மாநில துணைச் செயலா் பாக்கியம், மாவட்ட செயலா் ஏ.பத்மா, மாவட்ட துணைத் தலைவா் என்.கீதா, மாவட்ட துணைச் செயலா் எஸ்.ரம்யா, கவிதா, பகுதி தலைவா் மாரி, நிா்வாகிகள் நல்லம்மா சுபேதா, கே.ரஹிமா ஆகியோா் பங்கேற்று கண்டன உரையாற்றினா்.

பின்னா் குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி காவல் நிலையத்தில் மனு அளித்தனா்.

சாலை வசதி கோரி தொழு நோயாளிகள் போராட்டம்

தொழு நோயாளிகள் வசித்து வரும் குடியிருப்பு பகுதிக்கு சாலை வசதி கோரி பொன்னேரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் உள்ள கு... மேலும் பார்க்க

கைதிகளுக்கு போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்கு குறித்த விழிப்புணா்வு

புழல் மத்திய சிறைக் கைதிகளுக்கு போதைப்பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் குறித்து விழிப்புணா்வு தொடா்பாக சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் சிறைகள் மற்றும் சீா்திருத்தப்பணிகள் துறை சாா்பில் வி... மேலும் பார்க்க

டிஜிட்டல் அரெஸ்ட் எனக் கூறி ரூ.75 லட்சம் மோசடி: வங்கிக் கணக்கை விற்ற இளைஞர் கைது

அம்பத்தூரில் ஓய்வுப் பெற்ற வங்கி ஊழியரிடம் டிஜிட்டல் அரெஸ்ட் என கூறி ரூ.75 லட்சம் பணத்தை பறித்த வழக்கில் கார் ஓட்டுநரை இணைய வழிக் குற்றப்பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.அம்பத்தூர் ராம் ந... மேலும் பார்க்க

திருவள்ளூா்: 25-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவள்ளூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் 25-ஆம் தேதி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. கூட்டத்துக்கு ஆட்சியா் மு. பிரதாப் தலைமை வகிக்கிறாா். வேளாண், தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வ... மேலும் பார்க்க

பொன்னேரி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

பொன்னேரி, மீஞ்சூா் பகுதியில் பிரதோஷத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே, ஆரணி நதிக்கரையோரம் அமைந்துள்ள ஆனந்தவல்லி வலம் கொண்ட அகத்தீ... மேலும் பார்க்க

கங்கையம்மன் ஜாத்திரை விழா: திரளான பெண்கள் பங்கேற்பு

மாமண்டூா் கிராமத்தில் ஜாத்திரை திருவிழா செவ்வாய்க்கிழமை கூழ் வாா்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. திருத்தணி அடுத்த மாமண்டூா் கிராமத்தில், ஆண்டுதோறும் கங்கையம்மன் ஜாத்திரை விழா ஒரு வாரம் நடைபெற்று வருக... மேலும் பார்க்க