செய்திகள் :

சென்னையில் குழந்தை கழுத்தறுத்து கொலை: உறவினர்கள் போராட்டம்

post image

சென்னை ஓட்டேரியில் குடும்பத் தகராறில் குழந்தையை கழுத்தறுத்து கொன்று தற்கொலைக்கு முயன்ற தந்தையை கைது செய்யக்கோரி தாயின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குழந்தையின் தாயை தந்தை செல்போனில் மிரட்டிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்(38). அவரது மனைவி ரெபெகா(32). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஸ்டெபி ரோஸி என்கிற 7 வயதில் மகள் ஒருவர் இருந்தார். சதீஷுக்கும் அவரது மனைவி ரெபேகாவுக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு கடந்த ஒரு ஆண்டாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஓராண்டிற்கு முன்பு மனைவியை தாக்கியதாக சதீஷை ஓட்டேரி போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

சிறையில் இருந்து வெளியே வந்த சதீஷ், மனைவி ரபேகாவிடம் தொடர்ந்து பிரச்னை செய்து வந்துள்ளார். கடந்த 2 நாள்களுக்கு முன்பு மீண்டும் மனைவியுடன் சதீஷ் தகராறில் ஈடுபட்டது தொடர்பாக ரெபெகா ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் இருவரும் இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என போலீசார் அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தனது 7 வயது குழந்தை ஸ்டெபி ரோஸியை சதீஷ்குமார் அழைத்து சென்று ஆலந்தூரில் உள்ள தனியார் விடுதியில் அரை எடுத்து தங்கி உள்ளார்.

இந்த நிலையில், புதன்கிழமை காலை சதீஷ் தங்கி இருந்த அறையில் இருந்து ஸ்டெபி கழுத்தறுத்து இறந்து கிடந்துள்ளார். மேலும் சதீஷ் கழுத்தறுக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பரங்கிமலை போலீசார் உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சதீஷை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த பரங்கிமலை போலீசார், குடும்ப பிரச்னை காரணமாக சதீஷ்குமார் குழந்தையை கழுத்தறுத்துக் கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா அல்லது வேறு யாராவது இவர்களை கொலை செய்ய முயன்றார்களா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக சதீஷ்குமாரின் மனைவி ரெபெகாவிடமும், அவரது குடும்பத்தாரிடமும் பரங்கிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் உடல்கூறாய்வுக்குப்பின் குழந்தையின் உடல் தாயிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் ஓட்டேரியில் சிறுமியின் உடல் வைக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் கொலைக்கு காரணமாக இருந்த குழந்தையின் தந்தை சதீஷ் மற்றும் அவருடைய தாயரை போலீசார் இதுவரை கைது செய்யவில்லை எனக்கூறியும், உடனடியாக அவர்கள் இருவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி குழந்தையின் சடலத்தை வைத்து உறவினர்கள் ஓட்டேரி பகுதியில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் குழந்தையின் தந்தை சதீஷ் தாய் ரெபேகாவை மிரட்டிய ஆடியோவும் வெளியாகி அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்போம், ஏற்கமாட்டோம்: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி

Relatives of the mother protest demanding the arrest of the father who attempted suicide by strangling his child in a family dispute in Otteri, Chennai.

மான்செஸ்டர் டெஸ்ட்: இந்தியா பேட்டிங்! சிஎஸ்கே வீரர் அன்ஷுல் காம்போஜுக்கு வாய்ப்பு!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ‘ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராப... மேலும் பார்க்க

ராசேந்திர சோழனின் பிறந்தநாளில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி: முதல்வர்

ராசேந்திர சோழனின் பிறந்தநாளில், அவர் உருவாக்கிய சோழகங்கம் ஏரியில் நீர்வள ஆதார மேம்பாட்டுப் பணிகளும் - சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன் என்று ... மேலும் பார்க்க

பிரதமரும் அமைச்சரவைச் சகாக்களும் இன்னும் மெளனம் காப்பது ஏன்?

குடியரசு துணைத் தலைவர் ராஜிநாமா குறித்து பிரதமரும் அமைச்சரவைச் சகாக்களும் இன்னும் மெளனம் காப்பது ஏன்? என மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவின் 14-ஆவது கு... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு: தொழிலாளிகள் 2 பேர் பலி

ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தொழிலாளிகள் இரண்டு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.செவ்வாய் இரவு மற்றும் புதன்கிழமை அதிகாலை மஹோர் தாலுக... மேலும் பார்க்க

பெருமுதலாளிகள் மோசடி என்றால் வங்கிகள் கைகளை இறுகக் கட்டிக் கொள்வது ஏன்?: சு.வெங்கடேசன் எம்.பி.

அனில் அம்பானி தொடர்புடைய வங்கி கணக்குகளை “மோசடி” என ஸ்டேட் வங்கி வகைப்படுத்தியுள்ளது. ஆனால்… பல்லாயிரம் கோடி மோசடி பணத்தை 9 ஆண்டுகளாக மீட்கவில்லை. சாமானிய மக்களின் கடன் என்றால் கழுத்தில் துண்டை போட்டு... மேலும் பார்க்க

புதிய உச்சத்தில் தங்கம் விலை: பவுன் ரூ.75 ஆயிரத்தை கடந்து விற்பனை!

வரலாற்றில் முதல் முறையாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.760 உயா்ந்து ரூ. 75,040-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை உயர்வு நகைப்பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. சென்னையில்... மேலும் பார்க்க