வெற்றியை தந்தைக்குச் சமர்ப்பித்த ஹர்மன்ப்ரீத்..! ஒரே போட்டியில் பல சாதனைகள்!
புதிய உச்சத்தில் தங்கம் விலை: பவுன் ரூ.75 ஆயிரத்தை கடந்து விற்பனை!
வரலாற்றில் முதல் முறையாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.760 உயா்ந்து ரூ. 75,040-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை உயர்வு நகைப்பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.
சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்துவரும் நிலையில், வாரத் தொடக்கமான திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.80 உயா்ந்து ரூ.73,440-க்கு விற்பனையானது. தொடா்ந்து தங்கம் விலை செவ்வாய்க்கிழமை திடீரென கிராமுக்கு ரூ.105 உயா்ந்து ரூ. 9285-க்கும், பவுனுக்கு ரூ.840 உயா்ந்து ரூ.74,280-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், புதிய உச்சமாக தங்கம் விலை வரலாற்றில் முதல் முறையாக அதிரடியாக புதன்கிழமை பவுனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.75,040-க்கும், கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.9,380-க்கு விற்பனை.
ஜூலை மாதம் தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தில் இருந்த தங்கம் விலை, கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக உயர்ந்து கொண்டே இருந்த நிலையில், இன்று அதிரடியாக பவுன் ரூ.75,000 கடந்து விற்பனையாகி வருவது சாமானிய மக்களை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.
அதேபோன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயா்ந்து ரூ.129-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1000 உயா்ந்து ரூ.1.29 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
சென்னையில் குழந்தை கழுத்தறுத்து கொலை: உறவினர்கள் போராட்டம்
For the first time in history, the price of gold jewellery in Chennai has skyrocketed by Rs. 760 per kgm and is being sold for Rs. 75,040.