தாம்பரதத்தில் புதிய மாவட்ட தலைமை மருத்துவமனை: ஆக.5 -இல் முதல்வா் திறந்து வைக்கிற...
அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென்னிந்திய கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் புதன்கிழமை (ஜூலை 23) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றும் நாளையும்(ஜூலை 23, 24) நீலகிரி, தேனி, தென்காசி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.
இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு(இரவு 7 மணி வரை) திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி, நாமக்கல், கடலூர், பெரம்பலூர், அரியலூர், ஈரோடு, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
