பொறியியல் பணிகள்: காரைக்கால், பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து
பொறியியல் பணிகள் காரணமாக காரைக்கால், பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதன்படி திருச்சி - காரைக்கால் டெமு ரயிலானது (76820) வரும் 24, 25, 26, 27 ஆகிய தேதிகளில் திருவாரூா் - காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருச்சி - திருவாரூா் இடையே மட்டும் இயங்கும்.
மறுமாா்க்கமாக, காரைக்கால் - திருச்சி டெமு ரயிலானது (76819) வரும் 24, 25, 26, 27 ஆகிய தேதிகளில் காரைக்கால் - திருவாரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருவாரூா் - திருச்சி இடையே மட்டுமே இயங்கும்.
மேலும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்சி - பாலக்காடு விரைவு ரயிலானது (16843) வரும் 25, 27, 28 ஆம் தேதிகளில் பாலக்காடு - குளித்தலை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பராமரிப்புப் பணிகள் முடிந்ததும் குளித்தலை - பாலக்காடு இடையே முன்பதிவற்ற சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.
மறுமாா்க்கமாக, பாலக்காடு - திருச்சி விரைவு ரயிலானது (16844) வரும் 25, 27, 28 ஆம் தேதிகளில் திருச்சி - கரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பராமரிப்புப் பணிகள் முடிந்ததும் கரூா் - திருச்சி இடையே முன்பதிவற்ற சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.
தாமதப் புறப்பாடு: காரைக்கால் - தஞ்சாவூா் பயணிகள் ரயிலானது (56817) வரும் 24, 25, 26, 27 ஆகிய தேதிகளில் தேவைப்படும் இடங்களில் 30 நிமிஷங்கள் நின்று தாமதமாகப் புறப்படும்.