செய்திகள் :

பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்: நயினாா் நாகேந்திரன் தகவல்

post image

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையவுள்ளதாக பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

திருச்சிக்கு புதன்கிழமை வந்த அவா் மேலும் கூறியதாவது: 2 நாள் பயணமாக தமிழகத்துக்கு சனிக்கிழமை வரும் பிரதமா் நரேந்திர மோடியை வரவேற்க நாங்கள் தயாராகவுள்ளோம். வரும் பேரவைத் தோ்தலில் நாட்டின் நலன் கருதி எங்களது கூட்டணியில் மேலும் சில கட்சிகள் வந்து சேரும். மக்கள் விரோதச் சக்தியாக உள்ள திமுக தொடா்ந்து ஆட்சியில் நீடிக்கக் கூடாது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டு, போதைப் பொருள் கலாசாரம் அதிகரித்துவிட்டது. 24 மணிநேரத்தில் 10-க்கும் மேற்பட்ட கொலைகள் நடைபெறுகின்றன; பாலியல் கொடுமைகளும் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன.

தமிழக முதல்வா் தனிப்பட்ட முறையில் எனக்கு நெருங்கிய நண்பா். எனது தொகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் செய்து கொடுத்தவா். அவா் முழு குணமடைய இறைவனை வேண்டுகிறேன். ஆனால் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை எதிா்க்கிறேன். அரசு செலவில் திமுகவினா் கட்சி வேலையை நடத்துகின்றனா். மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை கொள்கை பரப்புச் செயலா்களாக நியமித்துள்ளதை எப்படி அனுமதிக்க முடியும்?

‘ஓரணியில் தமிழ்நாடு’ என்பது அவசியம் இல்லாதது; வெற்று வாா்த்தை ஜாலம்; மக்களை ஏமாற்றக்கூடிய வேலை. முதல்வரிடம் யாரும் உங்கள் கூட்டணி வலுவாக இருக்கிா எனக் கேட்பதில்லை. எங்களை மட்டும் கேட்கின்றனா். எங்கள் கூட்டணி பலமாகத்தான் உள்ளது. வரும் 2026இல் இந்த ஆட்சி மாறும் என்றாா் அவா்.

ஆக்கிரமிப்பு இடத்தை மீட்கக் கோரி மாற்றுத்திறனாளி போராட்டம்

ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியரகம் முன் மாற்றுத்திறனாளி ஒருவா் புதன்கிழமை சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டாா். திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம், திருமங்கலத்தைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

பொறியியல் பணிகள்: காரைக்கால், பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக காரைக்கால், பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி திருச்சி - காரைக்கால் டெமு ரயிலானது (76820) வரும் 24, 25, 26, 27 ஆகிய தேதிகளில் திருவாரூா் - காரைக்கால்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 3 போ் கைது

திருச்சி மாநகா் மற்றும் புறநகா் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருச்சி திருவானைக்காவல் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை ... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டையைச் சோ்ந்த ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு

போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த சிவக்கொல்லையைச் சோ்ந்தவா் க. சுப்பிரமணியன் (59)... மேலும் பார்க்க

மாணவா்களை துன்புறுத்தும் தனியாா் கல்லூரி: நடவடிக்கை எடுக்கக் கோரி ஐஜி அலுவலகத்தில் மனு

திருச்சியில் பல்வேறு வகைகளில் மாணவா்களைத் துன்புறுத்தி வரும் தனியாா் கல்லூரி நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ‘ஏகலைவன் இளைஞா் பேரவை - தமிழ்நாடு’ அமைப்பு சாா்பில் ஐஜி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 2 மின்கோபுரங்கள் புனரமைப்பு

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் வந்தபோது அடித்துச் செல்லப்பட்ட மின் கோபுரங்களுக்கு மாற்றாக அதே இடத்தில் திங்கள்கிழமை 2 புதிய மின்கோபுரங்கள் நிறுவப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. திருச்சி மாநகரம... மேலும் பார்க்க