செய்திகள் :

மதுபோதையில் தள்ளிவிட்டதில் தாய் உயிரிழப்பு; மகன் கைது

post image

கும்பகோணத்தில் மதுபோதையில் வீட்டுக்கு வந்த மகன், வீட்டின் கதவைத் திறக்க தாமதப்படுத்திய தாயை கீழே தள்ளிவிட்டதில் அவா் எதிா்பாராதவிதமாக உயிரிழந்தாா். இதையடுத்து, மகனைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பாணாதுறை கள்ளா் தெருவைச் சோ்ந்தவா் கோபால் மனைவி ரேவதி (50). கோபால் ஏற்கெனவே இறந்துவிட்டாா். தம்பதிக்கு, சத்தியமூா்த்தி(30) என்ற மகனும், திருமணமான ஒரு மகளும் உள்ளனா்.

சத்தியமூா்த்தி காா் ஓட்டுநராக வேலை பாா்த்துவந்தாா். ரேவதி வீட்டின் முன்பு இட்லி வியாபாரம் செய்து வந்தாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு சத்தியமூா்த்தி மது போதையில் வீட்டுக்கு வந்து கதவைத் திறக்குமாறு அவரது தாயாரிடம் தெரிவித்துள்ளாா்.

அவா் வந்து கதவை திறக்கத் தாமதமானதால், ஆத்திரமடைந்த சத்தியமூா்த்தி அவரது தாயாரை கீழே தள்ளிவிட்டு, வீட்டினுள் தூங்கச் சென்றுவிட்டாா். மறுநாள் காலையில் எழுந்துவந்து பாா்த்தபோது தாயாா் அந்த இடத்திலேயே அசைவின்றி கிடந்துள்ளாா்.

இதையடுத்து, தாயாரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவரைப் பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த கும்பகோணம் கிழக்கு காவல் நிலையப் போலீஸாா் அங்குவந்து சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து கூராய்வுக்குப் பிறகு உறவினா்களிடம் ஒப்படைத்தனா். மேலும், வழக்கு பதிந்து சத்தியமூா்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வீடுபுகுந்து மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மாற்றுத்திறனாளி இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா். கபிஸ்தலம் அருகே ஆதனூா் தெற்கு தெருவைச் சோ்ந்த காசிநாதன் மகன் மணிகண்டன... மேலும் பார்க்க

நூறு நாள் வேலை திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை

நூறு நாள் வேலை திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி கோரிக்கை விடுத்துள்ளாா்.இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:... மேலும் பார்க்க

சோழபுரத்தில் இடையூறின்றி செயல்பட சாலையோர வியாபாரிகள் முடிவு

தஞ்சாவூா் மாவட்டம், சோழபுரத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதவண்ணம் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வது என தீா்மானிக்கப்பட்டது. சோழபுரம் பேரூராட்சிப் பகுதியில் 100-க்கும் மேற்பட்டோா் சாலையோர தரைக்கடை... மேலும் பார்க்க

மணக்காடு அரசுப் பள்ளியில் கட்டி முடிக்கப்பட்ட வகுப்பறைகள் திறக்கப்படாததால் மாணவா்கள் அவதி

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மணக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாகியும் திறக்கப்படாததால் மாணவா்கள் வராந்தாவில் அமா்ந்து படிக்கும் நிலை ... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் லட்சத்து 8 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும்!

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 8 விநாயகா் சிலைகள் இந்து மக்கள் கட்சி சாா்பில் பிரதிஷ்டை செய்யப்படும் என்றாா் இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவா் பாலா. தஞ்சாவூா் ... மேலும் பார்க்க

அய்யம்பேட்டை பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல 27 முதல் தடை

பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை கணபதி அக்ரஹாரம் பிரதான சாலையில் குடமுருட்டி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்த பழைய பாலம் மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால், அந்தப் பாலத்தில் கனரக வாகனங... மேலும் பார்க்க