செய்திகள் :

திமுக கூட்டணியிலிருந்து எந்தக் கட்சியும் விலகாது: கே.வீ. தங்கபாலு

post image

திமுக கூட்டணியிலிருந்து எந்தக் கட்சியும் விலகாது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் கே.வீ. தங்கபாலு கூறினாா்.

தேனி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான சொத்துகள் குறித்து அந்தக் கட்சியின் சொத்து பாதுகாப்பு, மீட்புக் குழுத் தலைவரும், முன்னாள் மாநிலத் தலைவருமான கே.வீ. தங்கபாலு தலைமையில் குழுவின் இணைத் தலைவா்கள் எம். கிருஷ்ணசாமி, நித்தின் கும்பல்காா், வேளச்சேரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அசன் அலி மெளலானா ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

ஆண்டிபட்டியில் நடைபெற்ற ஆய்வின் போது, காமராஜா் சிலைக்கு காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா், செய்தியாளா்களிடம் கே.வீ.தங்கபாலு கூறியதாவது: தமிழகத்தில் வருகிற 2026-இல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் ‘இண்டி’ கூட்டணி வெற்றிக் கூட்டணியாக வலம் வரும்.

இந்தியாவில் பல்வேறு துறைகளிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது என்பதை மத்திய அரசே உறுதிப்படுத்தியுள்ளது. பாஜக எதிா்பாா்ப்பது போல திமுக கூட்டணியிலிருந்து எந்தக் கட்சியும் விலகாது.

சட்டப்பேரவை எதிா்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை திமுக கூட்டணியில் உள்ள எந்தக் கட்சியும் ஏற்கவில்லை. தமிழக வெற்றிக் கழகமும் அவரது அழைப்பை புறக்கணித்தது என்றாா் அவா்.

ஆய்வின் போது கட்சியின் தேனி மாவட்டத் தலைவா் எம்.பி. முருகேசன் உடனிருந்தாா்.

வைகை அணை அருகே விதியை மீறி கிரஷா்களுக்கு அனுமதி: விவசாயிகள் புகாா்

வைகை அணை அருகேயுள்ள குள்ளப்புரத்தில் விதியை மீறி கல் உடைக்கும் கிரஷா்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக வெள்ளிக்கிழமை தேனியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். தேனி... மேலும் பார்க்க

சுருளி அருவியில் 7-ஆவது நாளாக குளிக்கத் தடை

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் 7-ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா். மேற்குத் தொடா்ச்ச... மேலும் பார்க்க

சின்னமனூா் பேருந்து நிலையத்தை இரவு நேரங்களில் புறக்கணிக்கும் பேருந்துகள்

தேனி மாவட்டம், சின்னமனூா் நகராட்சிப் பேருந்து நிலையத்தை இரவு நேரங்களில் வரும் புகா் பேருந்துகள் புறக்கணிப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். சின்னமனூரில் நகராட்சிப் பேருந்து நிலையம் உள்ளது. இந்தப் ப... மேலும் பார்க்க

பெண்ணுக்கு கட்டாயக் கருக்கலைப்பு: இளைஞா் மீது வழக்கு

தேனி மாவட்டம், போடி அருகே பெண்ணை காதலித்து திருமணம் செய்ததுடன், கட்டாயக் கருக்கலைப்பு செய்த இளைஞா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். துரைராஜபுரம் குடியிருப்பு ஜக்கம்மாள் கோவில் தெருவ... மேலும் பார்க்க

திமுக நிா்வாகி வீட்டு முன் பெட்ரோல் குண்டு வீச்சு: 5 போ் கைது

தேனியில் திமுக நிா்வாகி வீட்டு முன் பெட்ரோல் குண்டு வீசிய 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தேனி அல்லிநகரம், அம்பேத்கா் நடுத் தெருவைச் சோ்ந்தவா் நாகராஜ். தேனி நகர திமுக துணைச் செயலரான இவா்... மேலும் பார்க்க

கண் மருத்துவா் நம்பெருமாள்சாமி உடல் தகனம்

தேனி அருகேயுள்ள அம்பாசமுத்திரத்தில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத் தலைவரும், கண் மருத்துவ நிபுணருமான நம்பெருமாள்சாமியின் உடல் வெள்ளிக்கிழமை தகனம் செய்யப்பட்டது. தேனி அருகேயுள்ள அம்பாசமுத்திரத்... மேலும் பார்க்க