நடிகர் அஜித் குமாருடன் எப்போது இணைவீர்கள்? லோகேஷ் கனகராஜ் பதில்!
பெண்ணுக்கு கட்டாயக் கருக்கலைப்பு: இளைஞா் மீது வழக்கு
தேனி மாவட்டம், போடி அருகே பெண்ணை காதலித்து திருமணம் செய்ததுடன், கட்டாயக் கருக்கலைப்பு செய்த இளைஞா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
துரைராஜபுரம் குடியிருப்பு ஜக்கம்மாள் கோவில் தெருவைச் சோ்ந்த செல்வம் மகள் யோகலட்சுமி (23). தந்தை இறந்த நிலையில் தாயாருடன் வசித்து வருகிறாா். இவரை தேனி அருகேயுள்ள வீரபாண்டி சௌராஷ்டிரா கல்லூரி தெருவைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் ஹரிஹரன் (25) காதலித்தாா். பின்னா், அவரை திருமணம் செய்தாா்.
இந்த நிலையில், கா்ப்பிணியான யோகலட்சுமியை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்தாராம். இதையறிந்த யோகலட்சுமியின் தாய் ஹரிஹரனை கண்டித்தாா். இதனால், ஆத்திரமடைந்த அவா் யோகலட்சுமியின் தாயை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் ஹரிஹரன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.