செய்திகள் :

நீலகிரி, கோவைக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

post image

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு தாண்டி அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும், மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,

ஜூலை 26ல் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூலை 27ல் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 1 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு

இன்று (26-07-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை..

இன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் கறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்த பகுதிக்கு மீனவர்கள் செல்லவேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

The weather forecast warns of very heavy rain in these two districts today.

இதையும் படிக்க:பாகிஸ்தானுக்குத் தெளிவான செய்தியை அனுப்பிய ஆபரேஷன் சிந்தூர்: உபேந்திர திவேதி

திருச்சியில் பிரதமர் மோடி! இபிஎஸ்ஸுடன் சந்திப்பு?

தூத்துக்குடியில் நலத்திட்ட தொடக்க விழாவில் பங்கேற்றபின், பிரதமர் மோடி திருச்சி சென்றடைந்தார். அங்கு அவரை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரி... மேலும் பார்க்க

மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை! முதல்வர் ஸ்டாலின்

மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் எனக்கு மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கட்சி உடன்பிறப்புகள் களத்தில் ஓய்வின்றி களமாட... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை: பிரதமர் மோடி

தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி சனிக்கிழமை இரவு தமிழகம் வந்தடை... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பிரதமர் மோடி !

மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி சனிக்கிழமை இரவு தமிழகம் வந்தடைந்தார். தனி விமானத்தில் தூத்துக்குடி வந்திறங்கிய அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ... மேலும் பார்க்க

தவெகவினருக்கு கட்சித் தலைமைக்கழகம் முக்கிய உத்தரவு!

தவெக கொள்கைகள், கோட்பாடுகள், குறிக்கோள்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்படக்கூடாது என்று கட்சித் தலைமைக்கழம் அறிவுறுத்தியுள்ளது.இது குறித்து கட்சியின் பொதுச்செயல் என்.ஆனந்த் வெளியிட்டு... மேலும் பார்க்க

தூத்துக்குடிக்குப் புறப்பட்டார் பிரதமர் மோடி!

மாலத்தீவிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி விமானத்தில் தூத்துக்குடிக்குப் புறப்பட்டார். அவர் இன்றிரவு 8 மணியளவில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் பார்க்க