வணிக வளாகத்தில் திடீர் கத்திக்குத்து! தாக்குதலால் 11 படுகாயம்; 6 பேர் கவலைக்கிடம...
காவிரியில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!
காவிரி கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் திறக்கப்பட்டு வந்த உபரி நீரின் அளவு வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளில் உபரி நீர் வரத்து காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஸ்டான்லி அணை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காவேரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
காவிரி கரையோரத்தில் வெள்ள நீர் அருகே சென்று புகைப்படம் எடுப்பதோ குளிப்பதோ துணி துவைப்பதோ கால்நடைகளை குளிப்பாட்டுவதோ தவிர்க்க வேண்டும் என்றும், வெள்ள நீர் அருகே செல்லக்கூடாது என்றும் மேட்டூர் பகுதியில் வருவாய்த் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல காவிரி கரையோரம் பகுதிகளில் வருவாய்த்துறை மூலம் எச்சரிக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில் நீர்வளத்துறை அதிகாரிகள் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.