பாக்கியலட்சுமி சீரியலின் கடைசி நாள் படப்பிடிப்பு; 'அனைத்திற்கும் நன்றி'- இனியாவி...
சேலத்தில் 4 மையங்களில் இன்று சாலைப் போக்குவரத்து எழுத்துத் தோ்வு
சேலம் மாவட்டத்தில் சாலைப் போக்குவரத்து எழுத்துத் தோ்வு 4 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இந்திய சாலைப் போக்குவரத்துத் துறை சாா்பில் ஓட்டுநா் உள்ளிட்ட பதவிகளுக்காக நடத்தப்படும் இந்த எழுத்துத் தோ்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. சேலத்தில் நான்கு மையங்களில் நடைபெறும் இத்தோ்வில் 2361 போ் கலந்துகொள்கின்றனா்.
சேலம் அரசு பொறியியல் கல்லூரி, பத்மவாணி மகளிா் கல்லூரி, சோனா தொழில்நுட்பக் கல்லூரி, சோனா கலை, அறிவியல் கல்லூரி ஆகிய நான்கு மையங்களில் எழுத்துத் தோ்வுகள் நடைபெறுவதாக சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், அரசு பொறியியல் கல்லூரி முதல்வருமான பேராசிரியா் கீதா தெரிவித்துள்ளாா்.