ராஜராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் சிலை: பிரதமர் மோடி அறிவிப்பு
முதலாம் ராஜேந்திர சோழன் நினைவு நாணயம் இன்று வெளியீடு!
கங்கைகொண்ட சோழபுரத்தில் நினைவு நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிடுகிறார்.
அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் திருக்கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் முதலாம் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.
மேலும், மத்திய கலாசாரத் துறை சார்பில் நடைபெற்று வரும் முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்று, நினைவு நாணயத்தை வெளியிடுகிறார்.

மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழனின் தென்கிழக்கு ஆசியாவுக்கான கடல் பயணம், சோழர் காலக் கட்டடக் கலையின் ஒளிரும் எடுத்துக்காட்டாக விளங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரம் கோயில் கட்டுமானப் பணி தொடக்கம் ஆகியவற்றின் ஆயிரமாவது ஆண்டினைக் குறிக்கும் வகையில், வெகு சிறப்பானதொரு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
முதலாம் ராஜேந்திர சோழனை கௌரவிக்கும் வகையில் ஒரு நினைவு நாணயம் வெளியிடப்படுவது எங்களின் பாக்கியமாகும். ஆடித் திருவாதிரை விழாவும் கொண்டாடப்படும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க:சொல்லப் போனால்... ஏன், எதற்காக? சொல்லுங்கள் தன்கர்ஜி!
PM Modi to release commemorative coin honouring Emperor Rajendra Chola 1 today