செய்திகள் :

ஓம் சிவோஹம்... இளையராஜாவின் இசைக்கு பிரதமர் மோடி எழுந்து நின்று பாராட்டு!

post image

கங்கைகொண்ட சோழபுரத்தில் இளையராஜாவின் இசைக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுந்து நின்று மரியாதை செய்தார்.

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் திருக்கோயில் வளாகத்தில் இன்று நடைபெறும் முதலாம் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் பிரதமா் நரேந்திர மோடி நினைவு நாணயம் வெளியிட்டு உரையாற்றுகிறாா்.

முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் கோயில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு, நினைவு நாணயத்தை வெளியிடுகிறாா்.

இந்நிகழ்வில் இசையமைப்பாளர் இளையராஜா தன் குழுவினருடன் திருவாசகத்திற்கு புதிய இசையமைத்து கலை நிகழ்ச்சியையும் நடத்தினார்.

ஓம் சிவோஹம் பாடலை இளையராஜா இசையமைக்கும்போது பிரதமர் மோடி எழுந்து நின்று மரியாதை செய்தார். அடுத்து, விழாவில் சோழீஸ்வரருக்கு திருவாசகம் சிம்பொனியையும் இளையராஜா இசைத்தார்.

பார்வையாளர்கள் அனைவரும் ராஜாவின் இசையில் மெய் மறந்து ரசித்தனர். பிரதமர் மோடியும் அதனை ரசித்து பார்த்தார்.

இசை நிகழ்ச்சியை முடித்த பிறகு இளையராஜா வாய்ப்பளித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

Prime Minister Narendra Modi stood up and paid tribute to Ilayaraja's music at Gangaikonda Cholapuram.

தியாகராஜ பாகவதராக துல்கர் சல்மான்! ஆர்வமூட்டும் டீசர் முன்னோட்டம்!

காந்தா திரைப்படத்தின் டீசர் அறிவிப்புக்கான முன்னோட்ட விடியோ ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய பிரபலமான நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகிவரும் காந்தா திரைப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வ... மேலும் பார்க்க

சிம்பு, வெற்றி மாறன் படத்தின் அப்டேட்!

நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றி மாறன் படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இயக்குநர் வெற்றி மாறன் வடசென்னை படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிற... மேலும் பார்க்க

விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்!

நடிகர் விக்ரம் நடிக்கவுள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ருக்மணி வசந்த் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நடிகர் விக்ரம் வீர தீர சூரன் - 2 படத்தைத் தொடர்ந்து மாவீரன் இயக்குநர் மடோன் அஸ்... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட மெஸ்ஸி..! டிராவில் முடிந்த இன்டர் மியாமி ஆட்டம்!

அமெரிக்காவில் நடைபெறும் எம்எல்எஸ் தொடரில் மெஸ்ஸி இல்லாமல் விளையாடிய இன்டர் மியாமி அணியின் ஆட்டம் சமனில் முடிந்தது.அமெரிக்காவின் சேஸ் திடலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இன்டர் மியாமி அணியும் சின்சினாட்... மேலும் பார்க்க

இசைவெளியீட்டு விழாவில் ரஜினி இதைக் குறிப்பிடுவார்: லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினிகாந்த் குறித்து பேசியுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரைக்கு வரு... மேலும் பார்க்க

பணம் சம்பாதிக்கத்தான் சினிமாவுக்கு வந்தேன்: விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி சினிமாவுக்கு ஏன் வந்தேன் என்பது குறித்து பேசியுள்ளார். நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பதுடன் இந்தியளவில் அறியக்கூடிய நடிகராகவும் இருக்கிறார். தற்போது, ... மேலும் பார்க்க