MK Stalin: தொண்டர்களின் வாழ்த்துகளுடன் வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்!
திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் ஊழியரைத் தாக்கிய புலியால் பரபரப்பு !
திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் ஊழியர் ஒருவரை புலி தாக்கிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் புலி கூண்டில் உள்ள குடிநீரை அதன் மேற்பார்வையாளர் ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை வெளியில் இருந்து மாற்ற முயன்றிருக்கிறார். அப்போது புலி தாக்கியதில் அவர் காயமடைந்தார்.
இதுகுறித்து உயிரியல் பூங்காவின் இயக்குநர் மஞ்சு தேவி கூறுகையில், ராமச்சந்திரன் உயிரியல் பூங்காவில் மேற்பார்வையாளராக உள்ளார். அவர் புலி கூண்டின் பொறுப்பாளராகவும் உள்ளார்.
நீர் மேலாண்மைக்கு சோழர்களே முன்னோடிகள்: பிரதமர் மோடி
தாக்குதல் உண்மையில் எதிர்பாராதது. கூண்டிற்குள் குடிநீரை மாற்ற முயன்றபோது இந்த சம்பவம் நடந்தது. கூண்டின் கம்பிகள் வழியாக அவரை புலி தாக்கியது. இதில் அவருக்கு நெற்றிக்கு மேலே சிறிய காயம் ஏற்பட்டது.
முதலில் அவர் பொது மருத்துவமனைக்கும், பின்னர் அரசு மருத்துவக் கல்லூரிக்கும் கொண்டு செல்லப்பட்டார். முதன்மை சிகிச்சைக்குப் பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்றார்.