செய்திகள் :

தியாகராஜ பாகவதராக துல்கர் சல்மான்! ஆர்வமூட்டும் டீசர் முன்னோட்டம்!

post image

காந்தா திரைப்படத்தின் டீசர் அறிவிப்புக்கான முன்னோட்ட விடியோ ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்திய பிரபலமான நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகிவரும் காந்தா திரைப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது.

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் நடிகரான எம். கே. தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாக இது உருவாகியுள்ளது.

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் காந்தா திரைப்படத்தில் நாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸும் முக்கிய கதாபாத்திரங்களில் சமுத்திரக்கனி, ராணா டக்குபதி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தின் டீசர் நடிகர் துல்கர் சல்மானின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை (ஜூலை 28) மாலை 3 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முன்னோட்ட விடியோவில் கருப்பு வெள்ளை பின்னணியில் துல்கர் சல்மான் சிரிக்கும் விடியோ படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

இதையும் படிக்க: சிம்பு, வெற்றி மாறன் படத்தின் அப்டேட்!

actor dulquer salmaan's kaantha movie teaser announcement video get good response

கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள சோழீஸ்வரர் கோயில் வரை மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு காரிலிருந்து நின்றபடி கையசைத்தவாறு சென்ற பிரதமர் மோடி.காரில் நின்றவாறு மக்களை நோக்கி கையசைத்து வரும் பிரதமர் மோடி.பல... மேலும் பார்க்க

சிம்பு, வெற்றி மாறன் படத்தின் அப்டேட்!

நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றி மாறன் படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இயக்குநர் வெற்றி மாறன் வடசென்னை படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிற... மேலும் பார்க்க

விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்!

நடிகர் விக்ரம் நடிக்கவுள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ருக்மணி வசந்த் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நடிகர் விக்ரம் வீர தீர சூரன் - 2 படத்தைத் தொடர்ந்து மாவீரன் இயக்குநர் மடோன் அஸ்... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட மெஸ்ஸி..! டிராவில் முடிந்த இன்டர் மியாமி ஆட்டம்!

அமெரிக்காவில் நடைபெறும் எம்எல்எஸ் தொடரில் மெஸ்ஸி இல்லாமல் விளையாடிய இன்டர் மியாமி அணியின் ஆட்டம் சமனில் முடிந்தது.அமெரிக்காவின் சேஸ் திடலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இன்டர் மியாமி அணியும் சின்சினாட்... மேலும் பார்க்க

ஓம் சிவோஹம்... இளையராஜாவின் இசைக்கு பிரதமர் மோடி எழுந்து நின்று பாராட்டு!

கங்கைகொண்ட சோழபுரத்தில் இளையராஜாவின் இசைக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுந்து நின்று மரியாதை செய்தார். அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் திருக்கோயில் வளாகத்தில் இன்று நடைபெறும் முதலாம் ... மேலும் பார்க்க