கே.எல்.ராகுல், ஷுப்மன் கில் ஆட்டமிழப்பு; போட்டி டிரா ஆகுமா?
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் உணவு இடைவேளையின்போது, இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 669 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
இங்கிலாந்தைக் காட்டிலும் 311 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி கடைசி நாள் ஆட்டத்தில் விளையாடி வருகிறது.
இரண்டாவது இன்னிங்ஸில் 0 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தபோதிலும், கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்டனர். கே.எல்.ராகுல் 90 ரன்களில் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய ஷுப்மன் கில் சதம் விளாசி அசத்தினார். அவர் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆட்டத்தின் கடைசி நாளான இன்று உணவு இடைவேளையின்போது, இந்திய அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் எடுத்துள்ளது. வாஷிங்டன் சுந்தர் 21 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 0 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 88 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: டெஸ்ட் போட்டிகளில் பென் ஸ்டோக்ஸ் புதிய சாதனை!
India had scored 223 runs for the loss of 4 wickets at the lunch break in the second innings of the fourth Test against England.