உத்தரகாண்ட் மான்சா தேவி கோயில்: கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி - முதல்வர் புஷ...
46 ஆண்டுகளுக்குப் பிறகு... கே.எல்.ராகுல், ஷுப்மன் கில் புதிய சாதனை!
இங்கிலாந்துக்கு எதிராக இந்திய வீரர்கள் கே.எல்.ராகுல், ஷுப்மன் கில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்கள்.
நான்காவது டெஸ்ட் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து பேட்ஸ்மென்கள் ரன் வேட்டை நடத்தியதல் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 669 ரன்களை குவித்தது.
மதிய உணவு இடவேளைக்கு முன்பு பேட்டிங் செய்த இந்திய அணி முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியளித்தது.
பின்னர், கே.எல்.ராகுல், ஷுப்மன் கில் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள்.
நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/2 ரன்கள் எடுத்திருந்தது. அதில் கே.எல்.ராகுல் 210 பந்தில் 87 ரன்கள், ஷுப்மன் கில் 167 பந்தில் 78 ரன்கள் எடுத்துள்ளார்கள்.
வெளிநாடுகளில் ஒரே தொடரில் இந்தியாவின் தொடக்க வீரர்கள் 500க்கும் அதிகமான ரன்கள்
774 - சுனில் கவாஸ்கர் (மே.இ.தீ. எதிராக), 1971
542 - சுனில் கவாஸ்கர் (இங்கிலாந்துக்கு எதிராக), 1979
508* - கே.எல்.ராகுல் (இங்கிலாந்துக்கு எதிராக), 2025 *
வெளிநாடுகளில் 500க்கும் அதிகம் எடுத்த இந்தியர்கள்
சுனில் கவாஸ்கர் (774), திலீப் சர்தேஷி (642) - மே.இ.தீ. எதிராக, 1970-71
ஷுப்மன் கில் (697*), கே.எல்.ராகுல் (508*) - இங்கிலாந்துக்கு எதிராக, 2025