செய்திகள் :

`அவர் மீதான வழக்கில் அவரே நீதிபதியாக இருப்பதை எவ்வாறு அனுமதிப்பது?' - மேனாள் நீதியரசர் அரி பரந்தாமன்

post image

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கூடங்குளம் அணு உலை, ஸ்டெர்லைட், மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் போராடி வருபவர். பயிற்சி பெற்ற அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பணி, திருப்பரங்குன்றம் மலை விவகாரம் உள்ளிட்ட வழக்குகளில் ஆஜரானவர்.

வாஞ்சிநாதன்

இந்த நிலையில் மதுரை உயர் நீதிமன்றக்கிளையில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன்- ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்த வழக்கு ஒன்றில் ஆஜராகி வந்த வாஞ்சிநாதனுக்கு பதிலாக வேறொரு வழக்கறிஞர் ஆஜராகி வருகிறார். இந்த வழக்கு விசாரணையில் வாஞ்சிநாதன் நேரில் ஆஜாராக வேண்டுமென்று நீதிபதிகள் சமீபத்தில் உத்தரவிட்டனர்.

இதைத்தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி பிற்பகல் வாஞ்சிநாதன் ஆஜரானபோது, "உங்களுடைய நடவடிக்கை நீதிமன்ற அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. நீங்கள் தொடர்ந்து நீதிமன்ற தீர்ப்புகள் குறித்தும், சாதிய ரீதியாக தீர்ப்புகள் வழஙகுவதாகவும் என் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை கூறி வருகிறீர்கள். இதுகுறித்து தங்களின் தற்போதைய நிலை என்னவென்று கூறுங்கள்?" நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி எழுப்ப, பதில் அளித்த வாஞ்சிநாதன், "எந்த வழக்கில் அப்படி கூறினேன் என்று குறிப்பிட்டு கூறினால் அது குறித்து தெரிவிக்கிறேன்" என்றார்.

நீதிமன்றம்!
நீதித்துறை

அதைத் தொடர்ந்து "வருகின்ற ஜூலை 28 ஆம் மீண்டும் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வழக்கறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு முற்போக்கு அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளனர். இந்தக்கூட்டத்தில் முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், மூத்த வழக்கறிஞர் ஹென்றி திபேன், பி.யூ.சி.எல் நிர்வாகி இரா முரளி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஆலோசனைக் கூட்டம்

செய்தியாளர்களிடம் பேசிய அரிபரந்தாமன், "வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது ஜி ஆர் .சுவாமிநாதன் அமர்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. இது தனிப்பட்ட வாஞ்சிநாதனுக்கான பிரச்னை அல்ல. இது ஒட்டுமொத்த சாதாரண மனிதருக்குமான பிரச்னை. உச்சநீதிமன்ற நீதிபதிக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பிய புகார் மனு, யாரோ ஒருவர் மூலமாக சமூக வலைதளத்தில் வெளியானால் அதற்கு புகார் கொடுத்த நபர் எப்படி பொறுப்பாக முடியும்? ஆகையால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களும் இந்த விஷயத்தில் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். ஜி ஆர்.சுவாமிநாதனை பற்றிய ஒரு புகார் மனுவிற்கான வழக்கில் அவரே அமர்வு நீதிபதியாக இருப்பதை எவ்வாறு அனுமதிப்பது? பாலியல் தொடர்பான வழக்கில் சிக்கிய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குகாய், அதற்குரிய வழக்கு ஒன்றில் அவரே அமர்வு நீதிபதியாக இருந்தபோது நாடு முழுவதும் கண்டனம் எழுந்தது. அது போன்ற தவறை நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் செய்யக்கூடாது. அவ்வாறு அவர் செய்தால் தலைமை நீதிபதி தலையீடு செய்து இதனைத் தடுக்கவேண்டும். இந்த அநீதிக்கு துணை போகக்கூடாது. திங்களன்று வரக்கூடிய இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி சுவாமிநாதனே கைவிட வேண்டும் அல்லது தலைமை நீதிபதி தலையிட்டு இதனை ரத்து செய்யவேண்டும் இதுதான் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் நோக்கம். நீதிமன்ற நடவடிக்கைகளில் பல்வேறு விஷயம் சார்ந்து முன்னோடியான போராட்டங்களை மேற்கொண்டது தமிழ்நாட்டு வழக்கறிஞர்கள் தான். அதேபோன்று நீதித்துறையில் சமூக நீதியை வலியுறுத்தி போராடியதும் தமிழ்நாடுதான். குறிப்பிட்ட விஷயத்தில் வாஞ்சிநாதன் பின் வாங்கினால்கூட வழக்கறிஞர்கள் இதனை விடுவதாக இல்லை" என்றார்.

7 ஆண்டுகள் சிறை தண்டனை (அ) ஆயுள் தண்டனை... ஆப்ஷன் கொடுத்த உச்ச நீதிமன்றம் - ஒரு சுவாரஸ்ய வழக்கு!

நீதி தாமதமாக நிலைநாட்டப்படும் வழக்குகளை பார்த்திருப்போம். அப்படிப்பட்ட ஒரு கவனிக்கத்தக்க வழக்கில் கல்லூரி படிக்கும்போது செய்த குற்றத்துக்காக குற்றவாளிக்கு 67 வயதில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உச்ச நீதி... மேலும் பார்க்க

Haryana: பாலியல் வழக்கில் சிறைக்கு சென்ற எம்.பி மகனுக்கு `துணை அட்வகேட் ஜெனரல்' பதவி

ஹரியானாவில் பாஜக எம்.பி சுபாஷ் பரலாவின் மகன் விகாஷ் பரலாவை அம்மாநில அரசு துணை அட்வகேட் ஜெனரலாக நியமித்திருக்கிறது. இந்த விகாஷ் பரலா, காரில் பெண் ஒருவரை துரத்திச் சென்று தொந்தரவு செய்த விவகாரத்தில் பால... மேலும் பார்க்க

குன்றத்தூர் அபிராமிக்கு சாகும்வரை சிறை - திருமணம் மீறிய உறவுக்காக குழந்தைகள் கொலை; தீர்ப்பு விவரம்

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் அருகே மூன்றாம் கட்டளை, அங்கனீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விஜய் (30.) இவரின் மனைவி அபிராமி (25). இந்தத் தம்பதியினிருக்கு அஜய் (6) என்ற மகனும், கார்னிகா (4) என்ற... மேலும் பார்க்க

``சம்பாதித்து சாப்பிடுங்க..'' - ரூ.12 கோடி, BMW கார் ஜீவனாம்சம் கேட்ட மனைவியிடம் உச்ச நீதிமன்றம்

விவாகரத்து வழக்கு ஒன்றில் மனைவிக்கு சாதகமான மும்பை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கணவர் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வில் நேற்று (ஜூல... மேலும் பார்க்க

Bengaluru Stampede: 'விராட் கோலியின் அந்த வீடியோ...' -ஆர்.சி.பி மீது குற்றம் சுமத்தும் கர்நாடகா அரசு

கர்நாடகா மாநிலம், பெங்களூரில் கடந்த ஜூன் மாதம் ஆர்.சி.பி அணி ஐ.பி.எல் கோப்பை வென்றதைக் கொண்டாடும் நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு ஆர்.சி.பி அணி நிர்வாகமே காரணம... மேலும் பார்க்க

திண்டுக்கல் சட்ட விரோத குவாரிகள்: "அதிகாரிகளின் கூட்டுச் சதியா?" - உயர்நீதிமன்றம் கேள்வி

குவாரியின் முன் பக்க கதவுகள் சீல் வைக்கப்பட்டு, பின்பக்கமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது என்று, சட்டவிரோதக் குவாரிகள் மீதான வழக்கு விசாரணையில் தெரிவிக்கப்பட்ட தகவலால் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரை நேரில் ஆ... மேலும் பார்க்க